RRR பாணியில் உருவாகும் இந்தியன் 2.. பீரியட் போர்ஷன் அதிகமாம்.. எங்கே ஷூட்டிங் நடக்குது தெரியுமா?

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் RRR படத்தை போல அதிகளவிலான பிரிட்டிஷ் பீரியட் காட்சிகளுடன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராம்சரணின் 15வது படம் மற்றும் இந்தியன் 2 என மாற்றி மாற்றி ஷங்கர் பணியாற்றி வருகிறார்.

ஷங்கரின் இந்தியன்

ஷங்கரின் இந்தியன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் சந்துரு மற்றும் சேனாபதி என டபுள் ரோலில் நடித்து அசத்தி இருப்பார் கமல்ஹாசன். அந்த படத்தின் கிளைமேக்ஸில் இந்தியனுக்கு சாவே இல்லை என முடித்த நிலையில், பார்ட் 2 திரைப்படம் 26 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகி வருகிறது.

லஞ்சத்துக்கு எதிராக

லஞ்சத்துக்கு எதிராக

லஞ்சம் வாங்குறதும் தப்பு, கொடுக்கிறதும் தப்பு என பெத்த மகனாக இருந்தாலும் லஞ்சம் வாங்கினால் குத்திக் கொன்னுடுவேன் என காட்டி ரசிகர்களை மிரட்டி எடுத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்தார் இயக்குநர் ஷங்கர். அப்பவே சேனாபதி வயதானவராக நடித்த நிலையில், தற்போது 90 வயதில் சேனாபதி மீண்டும் இந்தியனாக என்ன புரட்சி செய்யப் போகிறார் என்பதை காணவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆர்ஆர்ஆர் போல

ஆர்ஆர்ஆர் போல

ஆஸ்கர் ரேஸில் கலந்து கொண்டு இருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முழுக்க முழுக்க பிரிட்டிஷ் பீரியட் டிராமாவாக உருவான நிலையில், இந்தியன் 2 திரைப்படமும் அதிகப்படியாக பீரியட் படமாகவே உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெள்ளைக்காரர்கள் உடன் சேனாபதி செய்த போராட்டங்களை விரிவாக இந்த படத்தில் காட்ட உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

ஷூட்டிங் எங்கே

ஷூட்டிங் எங்கே

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட மலைப் பகுதிகளில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் காட்சிகள் அதிகளவில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. நேதாஜியின் போர்ஷனும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

ராம்சரண் இன்புட்

ராம்சரண் இன்புட்

இயக்குநர் ஷங்கர் ராம்சரணின் ஆர்சி15 படத்தை இயக்கி வரும் நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் அனுபவங்களை அவரிடம் இருந்து மொத்தமாக ஷங்கர் கறந்து விட்டாராம். ராம்சரணின் இன்புட் உள்ளிட்ட விஷயங்கள் இந்தியன் 2 படத்தை மெருகேற்றவும் பயன்பட்டு வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இயக்குநர் ஷங்கர் மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்க போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

விருது வேட்டையாடும்

விருது வேட்டையாடும்

இந்தியன் 2 திரைப்படத்தை மாஸ் மசாலா படமாக எடுக்காமல் இந்தியன் படம் எப்படி இருந்ததோ அதே போல தரமான படமாக உருவாக்கவே இயக்குநர் ஷங்கர் முயற்சி செய்து வருவதாகவும் இந்தியன் 2 வெளியானால் தேசிய விருது முதல் சர்வதேச விருதுகள் வரை வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X