என்னது...இந்தியன் 2 படத்தை மறுபடியும் எடுக்க போறாங்களா...அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை. இந்த படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல் உள்ளிட்ட பலரும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் மீண்டும் துவக்கப்பட உள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே படத்தில் 60 சதவீதம் பணிகளை முடித்து விட்டதாக குறப்படுகிறது.

இதற்கிடையில் டைரக்டர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். கமலும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.இவர்கள் இந்தியன் 2 படத்தை எடுப்பார்களா, மாட்டார்களா என கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர்.

இந்தியன் 2 ஷுட்டிங் எப்போ

இந்தியன் 2 ஷுட்டிங் எப்போ

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றொரு தகவலாக ஆகஸ்ட் 23 ம் தேதி இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களில் இந்த படத்தின் வேலைகள் முழுவதும் முடிக்கப்பட உள்ளதாக குறப்படுகிறது.

இப்படி ஒரு சிக்கல் இருக்கா

இப்படி ஒரு சிக்கல் இருக்கா

ஆனால் ஷுட்டிங்கை மீண்டும் துவங்குவதில் மற்றொரு சிக்கல் உள்ளதாம். அதாவது படத்தில் மிக முக்கிய ரோல்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் குழந்தை பிறந்த பிறகு நடிக்காமல் இருந்து வருகிறார். இனி குடும்பத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போல் நடிகர் விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இதனால் இவர்களை வைத்து ஏற்கனவே எடுத்த சீன்களை என்ன செய்வதென தெரியாமல் படக்குழு குழம்பி உள்ளதாம்.

என்னது...மறுபடி எடுக்க போறாங்களா

என்னது...மறுபடி எடுக்க போறாங்களா

காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு நடித்த ரோல்களில் வேறு ஒருவரை நடிக்க வைக்க தற்போது முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து, பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே எடுத்த சீன்களை மீண்டும் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். இந்த வேலைகளை முடித்த பிறகே, புதிதாக எடுக்க வேண்டிய சீன்களின் வேலைகளை துவக்க போகிறார்களாம்.

இவங்க எப்போ படத்தை முடிப்பாங்க

இவங்க எப்போ படத்தை முடிப்பாங்க

எடுத்த சீன்களையே மீண்டும் எடுத்து முடித்து, அதற்கு பிறகு புதிய சீன்கள் எடுப்பதானால் அதிக காலம் ஆகுமே. இவர்கள் சொல்வதை பார்த்தால் இப்போதைக்கு படத்தை முடிக்க மாட்டார்கள் போவே என ரசிகர்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனராம். ஆனால் படக்குழு என்ன செய்ய போகிறது என்பது தற்போது வரை சஸ்பென்சாக தான் வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X