இந்தியன் 2 vs ஜெயிலர்.. இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே ரஜினி மற்றும் கமல்.. யாரோட லுக் பெஸ்ட்?

சென்னை: விக்ரம் படம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், உடனடியாக ரஜினிகாந்த்தின் படங்கள் பற்றிய அறிவிப்பும் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன கொண்டாட்டமும் களைகட்டின.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நிலவி வரும் அதே இரு பெரும் ஜாம்பவான் நடிகர்களின் போட்டி இப்பவும் மெர்சல் காட்டி வருகிறது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்தியன் 2 புதிய போஸ்டருடன் அதை கம்பேர் செய்து கமெண்ட்டுகள் பறக்கின்றன.

47 வருட போட்டி

47 வருட போட்டி

கமல் ஹீரோவாக இருந்த காலக்கட்டத்தில் வில்லனாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து தனது தனி ஸ்டைல் மற்றும் நடிப்புக் காரணமாக சூப்பர்ஸ்டாராக மாறியவர் ரஜினிகாந்த். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என 47 ஆண்டுகள் ஆகியும் அந்த போட்டியை விடாமல் நட்பும் கெடாமல் பார்த்துக் கொள்வதே மற்ற முன்னணி நடிகர்களுக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.

இண்டஸ்ட்ரி ஹிட்

இண்டஸ்ட்ரி ஹிட்

எந்திரன், 2.0 என தமிழ் சினிமாவில் பெரிய வசூலை ரஜினிகாந்த் குவித்து வந்த நிலையில், விக்ரம் படத்தின் மூலம் 450 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து சமீபத்தில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து கமல்ஹாசன் கெத்துக் காட்டி உள்ளார். உடனடியாக ஜெயிலர் படம் மூலம் அடுத்த சவாலுக்கு ரஜினி தயாராக இந்தியன் 2 எனும் பிரம்மாஸ்திரத்தை இறக்குகிறார் கமல்.

ஜெயிலர் லுக்

ஜெயிலர் லுக்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. ரஜினி அணிந்திருக்கும் கண்ணாடி, அவர் கழுத்தில் இருக்கும் அந்த ஸ்டார் போட்ட டாலர் செயின், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் என அங்குலம் அங்குலமாக ரசிகர்கள் நோட் செய்து ரசித்து வருகின்றனர்.

இந்தியன் 2 கெட்டப்

இந்தியன் 2 கெட்டப்

இந்நிலையில், அதற்கு உடனடி போட்டியாக வந்துள்ளது இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர். 90 வயது சேனாபதியாக கமல்ஹாசன் மிரட்டவுள்ள படு மிரட்டலான கெட்டப் உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விக்ரம் படத்தின் வசூலை மட்டுமின்றி இந்தியன் 2 படம் வசூலிக்கப் போவதையும் கருத்தில் கொண்டு ரஜினிகாந்த்தின் ஜெயிலர் உருவாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கு.

1000 கோடி வசூல்

1000 கோடி வசூல்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ஆர்சி 15 விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக வெளியாக உள்ள இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் 1000 கோடி வசூலை டார்கெட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த்தின் அதிக வசூல் செய்த படங்கள் எல்லாம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்கள் என்பதால் நிச்சயம் மிகப்பெரிய போட்டி மீண்டும் ரஜினி மற்றும் கமல் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எது பெஸ்ட்

எது பெஸ்ட்

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இந்தியன் 2 கமலின் புதிய போஸ்டர் இந்த இரண்டு லுக்குகளில் எது பெஸ்ட் என்கிற பெரிய விவாதமே சோஷியல் மீடியாவில் ரஜினி - கமல் ரசிகர்கள் மத்தியில் சண்டையாக மாறி உள்ளது. போஸ்டரை மட்டுமே வைத்துப் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்று தான் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செய்யவும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X