twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒற்றுமையில் ஒளிர்ந்த இந்தியா.. மோடியின் வேண்டுகோள்.. விளக்கேற்றி அசத்திய பிரபலங்கள்!

    |

    சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையுடன் பல பிரபலங்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும் டார்ச் அடித்தும் ஆதரவு அளித்தனர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ராகவா லாரன்ஸ் வரை பல நடிகர்களும், நயன்தாரா, பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா, கங்கனா ரனாவத் என பல நடிகைகளும் ஒளி ஏற்றி இந்தியாவின் ஒற்றுமையை நிலை நாட்டி உள்ளனர்.

    ராகவா முதல் அக்கினி குடும்பம் வரை மின்விளக்குகள் இல்லாமல் ஒளிர்ந்தது இந்தியா ... ராகவா முதல் அக்கினி குடும்பம் வரை மின்விளக்குகள் இல்லாமல் ஒளிர்ந்தது இந்தியா ...

    ரஜினி

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினியுடன் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி கொரோனாவுக்கு எதிரான தங்கள் போராட்டத்தையும், பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்தினர். ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்தும் வீட்டில் விளக்கேற்றினார். முன்னதாக கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவையும் ரஜினி பதிவிட்டு இருந்தார்.

    அக்‌ஷய் குமார்

    எந்த அளவுக்கு நாம் ஒற்றுமையுடன் இருக்கிறோமே, அந்த அளவுக்கு இந்த கொரோனா இருளில் இருந்து நாம் மீண்டு வருவோம், பத்திரமாக இருங்கள், ஒற்றுமையுடன் இருப்போம், அது தான் நமது பலம் என பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் விளக்கேற்றி பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். கொரோனா நிதியாக 25 கோடி ரூபாய் அளிப்பதாக அக்‌ஷய் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூஜா ஹெக்டே

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் லாக் டவுனில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஷூட்டிங் இல்லாமல், நடிகைகள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் குவாரண்டின் வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே தனது வீட்டில் அடுக்கடுக்காக விளக்குகளையும் மெழுகுவர்த்தியும் ஏற்றியுள்ளார்.

    குழந்தைகளுடன் சூரி

    கொரோனாவால் இருட்டில் மூழ்கியிருக்கும் உலகத்தை ஒற்றுமை என்னும் வெளிச்சத்தால் விரட்டி அடிப்போம் ஜெய்ஹிந்த் என குழந்தைகளுடன் வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி காமெடி நடிகர் சூரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் குழந்தைகள் செய்யும் அட்டகாசத்தை தினமும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் சூரி.

    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    ஆர்யா, ஆர்யா 2, அலா வைகுந்தபுறமுலோ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள டோலிவுட் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், ஜனதா கர்ஃப்யூவின் போது குடும்பத்துடன் ஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தது போல, 9 மணிக்கு 9 நிமிடங்கள் பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க குடும்பத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.

    ரன்வீர் சிங் – தீபிகா

    ரன்வீர் சிங் – தீபிகா

    பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதியினர் விளக்குகளை கைகளில் ஏந்தி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கொரோனாவால் ஷூட்டிங் இன்றி இந்த குவாரண்டின் லைஃபை இருவரும் செம ஜாலியாக சமைத்தும், விளையாடியும் மகிழ்ந்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மகேஷ் பாபு

    தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு தனது வீட்டில் உள்ள மின் விளக்குகளை சரியாக 9 மணிக்கு அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி 9 நிமிடங்கள் தேசத்தின் ஒற்றுமையை காக்க நின்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் வந்த சரிலேறு நீக்கெவரு படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார்.

    ராஷி கண்ணா

    கொரோனாவுக்கு எதிராக போராடும் உறுதி வாய்ந்த நெஞ்சங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நேரத்தில் விளக்கேற்றுகிறேன் என நடிகை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ராஷி கண்ணாவின் இந்த புகைப்படத்தை சில நிமிடங்களிலேயே பல லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian Prime Minister’s lights up India for 9 Minutes request accepted for Several cine celebrities today. Also they shared their pictures in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X