»   »  "பெற்ற தாயைத்தான் அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்”- மார்பிங் புகைப்படத்திற்கு ஜோதி கிருஷ்ணா பதிலடி

"பெற்ற தாயைத்தான் அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்”- மார்பிங் புகைப்படத்திற்கு ஜோதி கிருஷ்ணா பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இணையதளங்களில் பரவி வரும் மலையாள நடிகை ஜோதி கிருஷ்ணாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களுக்கு அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதைச் செய்தவர் அவரது தாயையே இழிவுபடுத்தியுள்ளதாகவும் காட்டமாக கூறியுள்ளார் ஜோதி கிருஷ்ணா.

இதுகுறித்து ஜோதிகிருஷ்ணா கூறுகையில், "ஒரு கேவலமான குடும்பத்தில் பிறந்த மகனோ, மகளோ தங்களது தாயின்/ சகோதரியின் உடல் உறுப்புகளின்மீது எனது முகத்தை வைத்து மார்பிங் செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ளனர். இது பல்லாயிரக்கணக்காவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது.

Indian actress Jyothi Krishna hits back after photoshopped pornographic photo goes viral

என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலர் இவ்விவகாரத்தில் எனக்கு ஆதரவாக ஆறுதல் கூறி வருகின்றனர். எனவே, எனது முகத்துடன் கூடிய மார்பிங் படங்களை வெளியிட்டவன் தனது முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதையே எனக்கு வரும் ஆறுதல் செய்திகள் காட்டுகின்றன. எனவே, இதுதொடர்பாக நான் தனியாக விளக்கம் எதுவும் அளிக்க விரும்பவில்லை.

எனக்கு பக்கதுணையாகவும், ஆதரவாகவும் ஆறுதல் செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோதி கிருஷ்ணா பதிவிட்டுள்ளார். அவரது இந்த தைரியமான முடிவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
An Indian actress whose face was Photoshopped on to pictures of naked porn stars has condemned the people responisble for it and defiantly told those who shared it on social media that she is not embarrassed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil