»   »  பாகுபலி 2 ஃபர்ஸ்ட் லுக்... ஆவலோடு காத்திருக்கும் இந்திய சினிமா!!

பாகுபலி 2 ஃபர்ஸ்ட் லுக்... ஆவலோடு காத்திருக்கும் இந்திய சினிமா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகையே இந்திய சினிமாவின் பக்கம் திருப்பிய பாகுபலியின் அடுத்த பாகத்தை வரவேற்கத் தயாராகிவிட்டது இந்திய சினிமா.

நாளை மறுதினம் (அக்டோபர் 22) மும்பையில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பாகுபலியின் இரண்டாம் பாகமான 'பாகுபலி - முடிவு' முதல் தோற்ற ஸ்டில்கள், போஸ்டர்கள் வெளியாகவிருக்கின்றன.

Indian Cinema eagerly waits for the first look of Bahubali 2

பாகுபலி நாயகனான பிரபாசின் பிறந்த நாளும் அதே தேதியில் வருவதால், அவரைக் கவுரவப்படுத்துவது போலவும் இருக்கும் எனத் திட்டமிட்டு நாளை மறுநாள் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிடுகின்றனர்.

பாகுபலி - ஆரம்பம், மற்றும் பாகுபலி - முடிவு இரு பாகங்களுக்கும் மொத்தம் ரூ 350 கோடி பட்ஜெட் என முதலில் அறிவிக்கப்பட்டது. முதல் பாகம்ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இப்போது இரண்டாம் பாகம், முன்னிலும் அதிக எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் என பாக்ஸ் ஆபீஸ் கணித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே, 2-ம் பாகமும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 2017-ல் இந்தப் படம் உலகெங்கும் வெளியாக உள்ளது.

Read more about: bahubali 2 first look
English summary
The first look posters of 'Bahubali: The Conclusion' will be launched at Mumbai on Oct 22.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil