அடுத்தடுத்து உயிரிழப்புகளை சந்திக்கும் இந்திய சினிமா.. ஒரே வாரத்தில் உயிரைவிட்ட இரு இளம் ஹீரோக்கள்!

சென்னை: ஒரே வாரத்தில் இரண்டு இளம் நடிகர்கள் மரணமடைந்திருப்பது இந்திய சினிமாவை பெரும் கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

2020ஆம் ஆண்டு வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒரு பக்கம், வெட்டிகிளிகள் தாக்குதல் ஒரு பக்கம், புயல்கள் ஒரு பக்கம் என ஆண்டு ஆரம்பித்து 6 மாதங்களுக்குள்ளேயே பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சினிமாத்துறையே முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து சினிமாத்துறையில் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் விசு

நடிகர் விசு

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடிகரும் இயக்குநருமான விசு காலமானார். சம்சாரம் அது மின்சாரம், வரவு நல்ல உறவு, பெண்மணி அவள் கண்மணி, மணல் கயிறு உள்ளிட்ட ஏராளமான குடும்பப்படங்களை கொடுத்த அவர் மரணமடைந்தார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் சேதுராமன்

நடிகர் சேதுராமன்

அவர் இறந்த அடுத்த ஓரிரு நாட்களிலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரும் மருத்துவருமான டாக்டர் சேதுராமன் மரணமடைந்தார். 36 வயதான சேதுராமன் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். ஒன்றைரை வயது பெண் குழந்தையும் இளம் மனைவியையும் விட்டுச்சென்றார் அவர்.

நடிகர் இர்ஃபான் கான்

நடிகர் இர்ஃபான் கான்

அவரை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பையில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காலமானார். இர்ஃபான் கான், பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ரிஷி கபூர்

நடிகர் ரிஷி கபூர்

அவர் மரணமடைந்த அடுத்த நாளே பாலிவுட்டின் மூத்த நடிகரான ரிஷி கபூர் உயிரிழந்தார். இவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரை விட்டார். கடைசி வரை நடித்துக்கொண்டே இருந்த ரிஷி கபூரும் திடீர் என மரணமடைந்தனர். பாலிவுட்டின் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சி மேல் அதிச்சியாக இருந்தது.

சிரஞ்சீவி சர்ஜா

சிரஞ்சீவி சர்ஜா

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னனட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். 39 வயதான சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியான நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Recommended Video

சிரஞ்சீவி சர்ஜா மறைவிற்கு அவர் தான் காரணம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

அவர் உயிரிழந்த ஒரு வாரத்திற்குள் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்துள்ளார். 34 வயதான சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரத்திற்குள்ளேயே இரண்டு இளம் நடிகர்கள் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பது இந்திய சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X