»   »  பிரிட்டனில் வெளியாகிறது பாகுபலி 2... இந்தியப் பிரதமருடன் பிரிட்டிஷ் மகாராணி பார்க்கிறார்?

பிரிட்டனில் வெளியாகிறது பாகுபலி 2... இந்தியப் பிரதமருடன் பிரிட்டிஷ் மகாராணி பார்க்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி படம் வரும் ஏப்ரல் மாதம் பிரிட்டனில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை இந்திய பிரதமரும், இங்கிலாந்து ராணியும் பார்க்கவிருக்கின்றனர்.

காட்சிக்கு காட்சி பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் புகுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்த எஸ்எஸ் ராஜமௌலியின் 'பாகுபலி' படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே.

Indian PM and British Queen to watch Bahubali 2

'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் 'பாகுபலி 2'ம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்கள் 'பாகுபலி 2'ம் பாகத்தை இவ்விழாவில் காணவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

    English summary
    Sources say that Bahubali 2 will be released in big number of screens in Britain.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil