»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? விருது விழாவில் ராஜாமௌலி சொன்ன ரகசியம்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? விருது விழாவில் ராஜாமௌலி சொன்ன ரகசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன் என்ற கேள்விக்கு, 2017 ஏப்ரலில் தெரிந்து விடும் என்று படத்தின் இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.

சி என் என் நியூஸ் 18 சார்பில் பொழுதுபோக்கு துறையின் 2015 ம் ஆண்டின் சிறந்த இந்தியன் விருது எஸ். எஸ். ராஜ மௌலிக்கு வழங்கப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்ட ராஜமௌலி பாகுபலி படத்தின் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

 SS Rajamouli

அப்போது அவரிடம் பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன் என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டு சிரித்த ராஜமௌலி, 2017 ஏப்ரலில் இதற்கு விடை தெரிந்து விடும் என்றார். அத்தோடு , வரும் மாதம் சீனாவில் பாகுபலி படத்தை திரையிடப்போவதாகவும் தெரிவித்தார்.

பாகுபலி படத்தின் முதல் பாகம் பெறும் வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் இறுதியில் கட்டப்பா பாகுபலியை கொல்வதாக காட்டியிருப்பார்கள். அது ஒரு அதிர்ச்சி முடிவாக இருந்தது. என்ன நடந்திருக்கும் என்ன நடந்திருக்கும் ? என்று ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாகவே கட்டப்பா, பாகுபலி பற்றிய கேள்விகளையும், சஸ்பென்ஸ் பற்றிய கேள்விகளையும் கேட்டு வருகின்றனர்.

பொழுது போக்கு துறை பிரிவில் இந்தியன் ஆஃப் த இயர் விருது சஞ்சய் லீலாபன்சாலி, ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

English summary
SS Rajamouli, director of the blockbuster film Baahubali - The Beginning was adjudged the Indian of the Year 2015 in the Entertainment category.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil