டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!

By

சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

Recommended Video

4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், 'இன்று நேற்று நாளை'. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

இதில் மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள, ரவிசங்கர், அனுபமா குமார், ஆர்யா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இணைந்து தயாரித்தது

இணைந்து தயாரித்தது

டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இதை திருக்குமரன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உண்மைதான் என்று தயாரிப்பாளர் சிவி குமார் கூறியிருந்தார்.

ஆர்.ரவிக்குமார் கதை

ஆர்.ரவிக்குமார் கதை

அதன்படி, 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்திற்கு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் கதை எழுதி உள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இது சிவி.குமார் தயாரிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழாவில், நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாகரன், தயாரிப்பாளர் சிவி குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X