»   »  பாக்யராஜின் 'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை' பேச்சு: இனியா விளக்கம்

பாக்யராஜின் 'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை' பேச்சு: இனியா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சதுரஅடி 3500 பட இசை வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றி அப்படி பேசிய பாக்யராஜ் சார் மீது கோபம் இல்லை என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார்.

நிகில் மோகன் நடிக்கும் சதுரஅடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நாயகி இனியா வரவில்லை. இதை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மேடையில் தெரிவித்தனர்.

கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது என்று பாக்யராஜ் கூறினார். இது குறித்து இனியா கூறியிருப்பதாவது,

சுளுக்கு

சுளுக்கு

சில நாட்களுக்கு முன்பு எனக்கு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டதால் 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு டாக்டர் கூறினார். என்னால் இன்னும் சரியாக நடக்க முடியவில்லை.

மருத்துவமனை

மருத்துவமனை

ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இசை வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் மட்டும் அனுப்பினார்கள்.

அழைப்பு

அழைப்பு

வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு வரும். ஆனால் எனக்கு வரவில்லை. பரவாயில்லை. காலில் பிரச்சனை உள்ளதால் விழாவுக்கு வர முடியாது என்று படக்குழுவிடம் தெரிவித்தேன். என் காலை போட்டோ எடுத்தும் அனுப்பி வைத்தேன்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

பாக்யராஜ் சார் சீனியர் கலைஞர். அவரை மதிக்கிறேன். அவரிடம் படக்குழு தெரிவித்ததை வைத்தே அவர் மேடையில் பேசியுள்ளார். அவர் பேசியதில் எனக்கு வருத்தம் இல்லை. இந்த சம்பவத்தால் நான் பொறுப்பில்லாத திமிர் பிடித்தவள் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்றார் இனியா.

English summary
Actress Iniya said that she didn't attend the audio launch function of Sathura Adi 3500 as she had suffered ankle sprain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil