»   »  கரையோரம்... சிம்ரனை அடித்த இனியா!

கரையோரம்... சிம்ரனை அடித்த இனியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரையோரம் படத்தின் க்ளைமாக்ஸில் சிம்ரனை அடிப்பது போன்ற சண்டைக் காட்சியில் மிகவும் தயங்கியதாக இனியா தெரிவித்தார்.

சிம்ரன், இனியா, நிகிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கரையோரம்'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இனியா, நிகிஷா, படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ஜெகேஎஸ் கூறுகையில், "கரையோரம்' படம் பேய் படம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இது பேய் படம் அல்ல. இது ஒரு க்ரைம் திரில்லர் படம். படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திரில் இருக்கும்.

Iniya's experience in Karaiyoram

இந்த கரையோரம் சிம்ரன் அவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. வருகிற 27ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

இனியா கூறுகையில், "இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். கிளைமாக்ஸில் என்னுடைய கதாபாத்திரம் திருப்பு முனையாக இருக்கும்.

Iniya's experience in Karaiyoram

சீனியர் நடிகர் சிம்ரனுடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. கிளைமாக்ஸில் எனக்கும் சிம்ரனுக்கும் சண்டைக் காட்சி இருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் சிம்ரனை அடிக்க மிகவும் தயங்கினேன். ஆனால், சிம்ரன் என் தயக்கத்தைப் போக்கி நடிக்க வைத்தார்," என்றார்.

English summary
Actress Iniya says that she was hesitated to beat senior actress Simran in Karaiyoram climax scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil