»   »  இஞ்சி இடுப்பழகி – இரண்டாவது முறையாக இணையும் ஆர்யா அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகி – இரண்டாவது முறையாக இணையும் ஆர்யா அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவர்மகன் படத்தின் பிரபலமான பாடல் இஞ்சி இடுப்பழகி, நாயகன் கமல் ரேவதியைப் பார்த்து இந்தப் பாடலைப் பாடுவார். அந்தப் பிரபலமான பாடலின் தலைப்பையே படத்திற்கு தலைப்பாக்கி இருக்கிறார்கள்.

நடிகை அனுஷ்கா ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பாக இஞ்சி இடுப்பழகி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகம் படத்திற்குப் பிறகு ஆர்யா- அனுஷ்கா இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தமிழில் இஞ்சி இடுப்பழகி என்றும் தெலுங்கில் சைஸ் ஜீரோ எனவும் பெயரிட்டுள்ளனர்.

இஞ்சி இடுப்பழகி கதை

இஞ்சி இடுப்பழகி கதை

இந்தியில் வெளிவந்து ஹிட்டடித்த தும் லகா கே ஹெய்ஸா என்ற திரைப்படத்தின் கதை போன்றே இஞ்சி இடுப்பழகி படத்தின் கதையும் அமைந்துள்ளது. பொதுவாக ஆண்கள் தனக்கு வரப்போகிற மனைவி ஒல்லியாக, அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் படத்தின் ஹீரோ ஆர்யாவும் அப்படி ஆசைப் படுகிறார். ஆனால் அவரின் மனைவியாக வரும் அனுஷ்கா நன்கு குண்டாக இருக்க, அதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லி கடைசியில் சந்தோஷம் தான் அழகு என்று கூறுகின்ற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறார்களாம்.

வெளிநாட்டுத் தயாரிப்பாளர் ஆர்யா

வெளிநாட்டுத் தயாரிப்பாளர் ஆர்யா

படத்தில் ஆர்யா வெளிநாட்டு ஆவணப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பளராகவும், அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி யாகவும் நடித்து வருகின்றனராம்.

இஞ்சி இடுப்பழகி எனது ரிலாக்ஸ்

இஞ்சி இடுப்பழகி எனது ரிலாக்ஸ்

ருத்ரமா தேவி, பாகுபலி என்று தொடர்ந்து சரித்திரப் படங்களில் நடித்து வந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி பற்றி இப்படிக் கூறியிருக்கிறார் " சரித்திரப் படங்களிலும் சண்டைப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்த என்னை ரிலாக்ஸ் செய்து கொள்வது போல இஞ்சி இடுப்பழகி படம் அமைந்துள்ளது".

இரண்டாம் உலகத்தைத் தொடர்ந்து – இஞ்சி இடுப்பழகி

இரண்டாம் உலகத்தைத் தொடர்ந்து – இஞ்சி இடுப்பழகி

இரண்டாம் உலகம் படத்தைத் தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்தையும் தயாரிக்கிறது பிவிபி சினிமாஸ்.

தெலுங்கும் தமிழும் கலந்த கலவை

தெலுங்கும் தமிழும் கலந்த கலவை

இஞ்சி இடுப்பழகி படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடல்கள் எழுதுவது மதன் கார்க்கி. பிரபல தெலுங்கு இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் படத்தை இயக்க, மதன் கார்க்கியின் வரிகளுக்கு இசையமைக்கிறார் தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி.

இரண்டு மொழிகளிலும் இஞ்சி இடுப்பழகி

இரண்டு மொழிகளிலும் இஞ்சி இடுப்பழகி

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. தமிழில் இஞ்சி இடுப்பழகி என்றும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்றும் பெயரிட்டு உள்ளனர், இரண்டு மொழிகளிலும் ஆர்யாவே நாயகனாக நடிக்கிறார்.

இஞ்சி இடுப்பழகியின் பெயர் ஸ்வீட்டி

இஞ்சி இடுப்பழகியின் பெயர் ஸ்வீட்டி

அனுஷ்கா இந்தப் படத்தில் ஸ்வீட்டி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார், நிஜத்திலும் அவர் பெயர் ஸ்வீட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக குண்டாக மாறும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறாராம் அனுஷ்கா.

English summary
After Irandam Ulagam, Arya and Anushka are joining hands again for a Tamil - Telugu comedy film inji idupazhagi. The Telugu Version Movie Name Is Size Zero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil