»   »  இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவும்!… சின்னவீடு கல்பனாவும்!!

இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவும்!… சின்னவீடு கல்பனாவும்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அழகி அனுஷ்கா குண்டு பெண்ணாக மாறி நடித்திருக்கிறார். இத்தனை நாட்களாக தமிழ் சினிமா உலகில் நடிகர்கள் மட்டுமே தங்களின் கதாபாத்திரங்களுக்காக மொட்டை அடித்து, தாடி வளர்த்து, உடலை ஏற்றி இறக்கி, சிக்ஸ்பேக்ஸ் வைத்து நடித்தனர்.

நடிகைகளும் தங்களால் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறமுடியும் என்பதை சமீப காலங்களில் நிரூபித்து வருகின்றனர். இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்திருக்கும் அனுஷ்கா அதற்கு சிறந்த உதாரணம்.

யோகா செய்து உடலை பிட் ஆக வைத்திருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக சில பல தியாகங்களை செய்து குண்டு பெண்மணியாக மாறியிருக்கிறார்.

நான்கு சீன்களில் கவர்ச்சி... மரத்தைச் சுற்றி டூயட் என்றில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படங்களாகவே தேடி தேடி நடித்து வருகிறார் அனுஷ்கா. ஆண்டு இரண்டு படங்களில் நடித்தாலும் தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் அனுஷ்காவின் நடிப்பிற்கு சரியான தீனி கிடைத்துள்ளது என்றே கூறலாம். போஸ்டரின் மூலம் பிரமிப்பை ஏற்படுத்திய அனுஷ்கா... டீசரின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.

குண்டு அனுஷ்கா

குண்டு அனுஷ்கா

தலைப்பு என்னவோ இஞ்சி இடுப்பழகிதான்... ஆனால் குண்டு உடலழகி அனுஷ்காவை திருமணம் செய்து கொண்டு முதலிரவு அறையில் அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் ஆர்யாவைப் பார்த்த போது எனக்கென்னவோ சின்னவீடு படத்தில் கல்பனாவை திருமணம் செய்து கொண்ட பாக்யராஜ் நினைவு வந்து போனது.

அழகான மனைவி

அழகான மனைவி

சின்னவீடு படத்தில் அழகான பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று பலவித கற்பனைகளோடு வாழ்ந்து வந்த கோபாலுக்கு குண்டான பெண் மனைவியாக வாய்க்கவே, தாலி கட்டி மாலை மாற்றும் போது ஒரு யானையை காட்டுவார்கள். அது ஏதோ நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிதான் என்றாலும் படத்தில் குண்டான பெண்ணை திருமணம் செய்தவன் எல்லாம் ஏதோ பாவம் செய்தவன் என்பது போலவே காட்டியிருப்பார்.

சின்னவீடு பாக்யராஜ்

சின்னவீடு பாக்யராஜ்

மனைவியை பிடிக்காவிட்டால் அழகான பெண்ணை சின்னவீடு ஆக செட் அப் செய்து கொள்ளலாம் என்று கூறிய பாக்யராஜ், அதே நேரத்தில் கள்ளக்காதல் மூலம் என்னென்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற மெசேஜை தனது பாணியில் கொஞ்சம் கிளுகிளுப்பாகவே கூறியிருப்பார் பாக்யராஜ்.

புத்திசாலி மனைவி

புத்திசாலி மனைவி

குண்டான பெண்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல... அவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள் என்றும் கல்பனா பாத்திரம் மூலம் உணர்த்தியிருப்பார். பிறன்மனை நோக்குதல் தவறு என்பதுதான் சின்னவீடு படத்தின் மெசேஜ்.

சைஸ் ஜீரோ

சைஸ் ஜீரோ

இஞ்சி இடுப்பழகியில் கதையே, கணவனின் ஆசைக்காக குண்டாக இருக்கும் அனுஷ்கா எப்படி ஒல்லியாகிறார் என்பதுதானாம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்திற்கு தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.

குண்டு மனைவிகள்

குண்டு மனைவிகள்

இன்றைக்கும் எத்தனையோ கணவர்கள் மனைவி குண்டாக இருக்கும் மனைவியை வெளியே அழைத்துப் போகவே வெட்கப்படுகின்றனர். இஞ்சி இடுப்பழகி படத்தைப் பார்த்து அனுஷ்காவைப் போல இஞ்சி இடுப்பழகியாக மாறவேண்டும் என்று எத்தனைப் பெண்களுக்கு ஆசை வரப்போகிறதோ தெரியவில்லை.

குண்டுதான் அழகு

குண்டுதான் அழகு

சைஸ் ஜீரோவாக இருப்பதெல்லாம் திருமணத்திற்கு முன்பு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் கொஞ்சத்திற்கு கொஞ்சமேனும் பூசினார் போல இருந்தால்தான் அழகு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

ரேவதி ஏன் பாடினார்?

ரேவதி ஏன் பாடினார்?

அதெல்லாம் சரிதான்... கமல்ஹாசனைப் பார்த்து இஞ்சி இடுப்பழாக என்று ரேவதி ஏன் பாடினார் என்றுதான் என்பது இன்னமும் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. ரேவதியைப் பார்த்து இஞ்சி இடுப்பழகி என்று கமல் பாட அதுவே இப்போது ஒரு படத்திற்கு தலைப்பாக மாறியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

English summary
Anushka is working day and night to justify the movie Inji Idupazhagi title and is also doing Yoga. Inji Idupazhagi is the starting line of Kamal Haasan's famous song from the movie 'Devar Magan', and it seems this word has made an inspiration for the movie crew to place it as their title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil