»   »  மீண்டும் தள்ளிப் போனது அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படம்!

மீண்டும் தள்ளிப் போனது அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான்காவது முறையாக தள்ளிப் போய்விட்டது அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி. வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் ‘ருத்ரமாதேவி' பெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

Inji Iduppazhagi postpones to Nov 27

அடுத்து ஆர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி' படமும் உருவாகியிருக்கிறது. இப்படம் முதலில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிப் போனது.

ஆனால் அந்தத் தேதியிலும் வெளியாகவில்லை. ‘ருத்ரமாதேவி' படத்துடன் இணைந்து ஒரே நாளில் வெளியாகும் என்று கூறினர். ஆனால் சில காரணங்களால் அதுவும் தள்ளிப் போனது. ஆயுதபூஜை தினத்தன்று வெளியாகலாம் என்றனர்.

Inji Iduppazhagi postpones to Nov 27

இப்போது மேலும் ஒரு மாதம் தள்ளிப் போயுள்ள பட வெளியீடு.

வரும் நவம்பர் 27ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

Inji Iduppazhagi postpones to Nov 27

இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கியிருக்கிறார். பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மரகதமணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் உருவாகிறது.

English summary
Anushka's Inji Iduppazhagi movie release has been postponed again and the final date is Nov 27.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil