»   »  இஞ்சி இடுப்பழகி எகிற வைக்கும் 7 எதிர்பார்ப்புகள்

இஞ்சி இடுப்பழகி எகிற வைக்கும் 7 எதிர்பார்ப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் இஞ்சி இடுப்பழகி படம் ரசிகர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

உடல் எடை குறித்த விழிப்புணர்வை இளம்பெண்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய ஒரு படமாக இஞ்சி இடுப்பழகி உருவாகி இருக்கிறது.

ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் 7 விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

அனுஷ்கா

அனுஷ்கா

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திரப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ராணியாகத் திகழும் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகியாக நடித்திருக்கிறார்.

குண்டுப் பெண்

குண்டுப் பெண்

கொடியிடை மேனியாகத் திகழ்ந்த அனுஷ்கா இந்தப் படத்தில் உடலெடையை அதிகரித்து குட்டி கும்கி யானையாக நடித்திருக்கிறார். நாயகர்களுக்கு இணையாக உடல் எடையை அதிகரித்து நடித்திருப்பதால் அனுஷ்கா ரசிகர்கள் ஆச்சரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள்

கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள்

ஜீவா, ராணா, பாபி சிம்ஹா, நாகார்ஜுனா போன்ற நடிகர்களும் ரேவதி, ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா மற்றும் தமன்னா ஆகியோரும் இஞ்சி இடுப்பழகியில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

இத்தனை நடிகைகளா

இத்தனை நடிகைகளா

நடிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுப்பது நாமறிந்த ஒன்றுதான். ஆனால் நடிகைகள் சிறப்புத் தோற்றங்களில் நடிப்பது மிகவும் அரிதான ஒன்று. அதன்படி பார்த்தால் முன்னணி நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி

இஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி

தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் படத்தில் இடம்பெறுகிறது. ஆர்யாவின் கனவுப் பாடலாக வரும் இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனங்கவர்ந்த ஒரு பாடல் என்பதால் திரையில் இப்பாடலைக் காண ரசிகர்கள் மரண வெய்ட்டிங்.

நிஜமான இஞ்சி இடுப்பழகி

நிஜமான இஞ்சி இடுப்பழகி

நிஜமான இஞ்சி இடுப்பழகியான நடிகை ரேவதி இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

தூக்கலான வசனங்கள்

தூக்கலான வசனங்கள்

அது காமெடியோ, செண்டிமெண்டோ நடிப்பில் பட்டையைக் கிளப்புவது போலவே வசனங்களிலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார் அனுஷ்கா. மொத்தத்தில் இவரின் நடிப்பிலும் வசனத்திலும் திரையரங்குகள் அதிரப் போவது மட்டும் உறுதி.

கடைசி வரைக்கும் ஆர்யா பத்தி எதுவும் சொல்லலையேன்னு பாக்கறீங்களா ஆர்யாவப் பொறுத்தவரை விளம்பரமே தேவையில்லை பாஸ்!

English summary
Arya - Anushak Starrer Inji iduppazhagi Top 7 Expectations List out here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil