»   »  தீபாவளி ரேஸில் இஞ்சி முறப்பா!

தீபாவளி ரேஸில் இஞ்சி முறப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு தூங்கா வனம், வேதாளம் என இரு பெரிய படங்கள் ரிலீசாகும் நிலையில், புதிதாகக் களத்தில் குதித்துள்ளது இஞ்சி முறப்பா.

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் - ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் இஞ்சி முறப்பா.

Inji Murappa in Deepavali race

இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார்.

இவர்களுடன் ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா, சிரி, ரகு ஆகியோர் நடிக்கிறார்கள்.

Inji Murappa in Deepavali race

பழனிபாரதியின் பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ் சகா.

Inji Murappa in Deepavali race

இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் குறித்து கூறுகையில், "தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணனின் கதை இது. தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம். இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்," என்றார் இயக்குநர் சகா.

Inji Murappa in Deepavali race

வஜ்ரம் படத்தை தயாரித்ததுடன் சதுரன் படத்தை உலகமுழுவதும் வெளியிட்ட ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிடுகிறது.

English summary
Inji Murappa, a small budget movie made by newcomers is joining in the Deepavali race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil