ஆன்லைன் சர்வீஸ்.. மாசத்துக்கு லட்சங்களில் பலூன் அக்கா வருமானம்.. படிக்க வேண்டாமா? இணையவாசிகள் கேள்வி
சென்னை: இணையம் வளர்ந்த பிறகு அதை பலரும் சரியாக பயன்படுத்தி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதை வைத்து பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து மோசடி வழக்குகளில் கைதாகிறார்கள். ஆனால் பலூன் அக்கா என்று பலராலும் அறியப்பட்டவரின் செயலை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை என இணையவாசிகள் புலம்பும் அளவுக்கு அவரது செயல்பாடு உள்ளது.
அதாவது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய பின்னர், இன்ஃபுளிய்ன்சர்களாக மாறிவிடுகிறார்கள். அதன் பின்னர் சிலர் மிகவும் மோசமான பதிவுகள், இரட்டை அர்த்த பேச்சுக்களால், இணையவாசிகளை கவர முயற்சிக்கிறார்கள். இவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், தங்களது சேட்டைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விடுகிறார்கள். குறிப்பாக, சப்ஸ்கிரைப் செய்யுங்கள், ஆன்லைன் சர்வீஸ் செய்யப்படும், வீடியோ கால் சர்வீஸ் செய்யப்படும் பகிரங்கமாகவே அறிவிக்கிறார்கள்.

எத்தனை நாளைக்குத்தான் சென்சார்டு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பது என்ற மனநிலைக்கு வரும் இணையவாசிகள் பலரும் சப்ஸ்கிரைப் செய்து கொண்டு, ஆன்லைன் வீடியோ காலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சமாச்சாரங்களை மார்க்கெட் போன நடிகைகளும் கூட செய்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது பலூன் அக்கா என அழைக்கப்படுகிற, Aurora Sinclair-உம் அந்த வரிசையில் தன்னை சேர்த்துக் கொண்டு விட்டாரா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பலூன் அக்கா: அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சப்ஸ்கிரைப் செய்தால் மாதத்திற்கு ரூபாய் 390 என அவர் அறிவிக்க, இதுவரை 1409 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். இதைப் பார்த்த இணையவாசிகள், இதுவரை 1409 பேர் என்றால், மாதத்திற்கு ரூபாய் 5 லட்சத்து 49 ஆயிரத்து 510 வருமானம் பார்க்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும், இப்படி ஆன்லைனில் மாதம் லட்சங்களில் சம்பாதிக்க படிப்பு தேவையில்லை. எதுக்கு படித்துக் கொண்டு காலத்தை வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நெட்டிஷன்ஸ் கமெண்ட்ஸ்: அதே நேரத்தில் இதுபோன்ற செயல்களை விமர்சிக்கும் இணையவாசிகளும் உள்ளார்கள். இன்ஸ்டாகிராமில் இன்றைக்கு இரட்டை அர்த்த பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் இதுபோன்ற இடத்திற்குத்தான் வந்து நிற்பார்கள் என்று பேசிவருகிறார்கள். அதே நேரத்தில் அவரவர் சொந்த வாழ்க்கையில் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யட்டும், அதனால் பிறருக்கு பிரச்னை ஏற்படும் போது, அதை கேள்விக்கு உள்ளாக்குவது சரி, அதை விடுத்து, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது என்பது சரியல்ல என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுக்கே ஷான் ஆன எப்படி? : அதே நேரத்தில் நீங்க என்ன இதுக்கே இவ்வளவு ஷாக் ஆகறீங்க. இந்தியில் சில இன்ஃபூளியன்சர்கள் மாதம் 35 லட்சங்கள் முதல் 50 லட்சங்கள் வரை இப்படியான சப்ஸ்கிரைப் மூலம் சம்பாதிக்கிறார்கள். பல நடிகைகளே இந்த வேலைகளில் இறங்கி விட்டார்கள். இது எல்லாம் ரொம்ப சின்ன அமவுண்ட். எனவே, ரொம்பவும் ஷாக் ஆகாதீங்க எனவும் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











