»   »  நட்புக்காக இதையும் செய்வார் விஜயகாந்த்!

நட்புக்காக இதையும் செய்வார் விஜயகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் மசாலா படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த காலத்தில் பி, சி சென்டர் ரசிகர்களுக்கான நடிகரானவர் விஜயகாந்த். கிராமப்புறங்களில் விஜயகாந்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.

கருப்பான உருவத்தோடு இருக்கும் அவரை ஆதர்ஸ நாயகனாகவே கொண்டிருந்தனர் பலர். அவரது புள்ளிவிபர வசனங்களுக்குப் புல்லரித்துப் போகாத சினிமா ரசிகர்கள் மிகக்குறைவு. அவரைப் பற்றிய 10 சுவையான தகவல்களைப் பார்க்கலாம்...

எஸ்.ஏ.சந்திரசேகர் :

எஸ்.ஏ.சந்திரசேகர் :

ரஜினிகாந்துக்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் போல், விஜயகாந்துக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

புதுமுக இயக்குநர்கள் :

புதுமுக இயக்குநர்கள் :

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.வி.உதயகுமார் என இந்தப் பட்டியல் நீளும். பல புதுமுக இயக்குநர்களைத் திரைக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் விஜயகாந்த்.

தமிழ்ப்பற்று

தமிழ்ப்பற்று

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கேப்டன்

கேப்டன்

புரட்சிக்கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது.

எம்.ஜி.ஆர் புகைப்படம் :

எம்.ஜி.ஆர் புகைப்படம் :

நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு.

நடிகர் சங்கத் தலைவர் :

நடிகர் சங்கத் தலைவர் :

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

வயிறாரச் சாப்பாடு :

வயிறாரச் சாப்பாடு :

'பாய்ஸ்' படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் சொல்வதாக ஒரு வசனம் வரும். 'விஜயகாந்த் ஆபிஸ்ல எப்ப கறிச்சோறு போடுறாங்க...' என சென்னையில் இலவசமாக சாப்பாடு கிடைக்கும் இடங்களின் டேட்டாபேஸ் சொல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகாந்த் வீட்டில் 100 பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும்.

பாசக்காரர் :

பாசக்காரர் :

எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இவர்களுக்கு இரண்டு மகன்கள்!

ஃபுட்பால் பிரியர் :

ஃபுட்பால் பிரியர் :

பள்ளியில் படிக்கும்போது ஃபுட்பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்துவிட்டது.

நட்புக்காக :

நட்புக்காக :

பால்யகாலம் முதல் தோள்கொடுத்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். தமிழ்மொழிப் பற்றாளரான விஜயகாந்த் தன் கொள்கையைத் தளர்த்திக்கொண்டு 'மே டே' எனும் ஆங்கிலப் படத்தில் நடிக்கச் சம்மதித்தது இதே இப்ராஹிம் ராவுத்தருக்காகத்தான். ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை.

English summary
Vijayakanth is an indian actor and politician. He played 17 films each with S.A.Chandrasekar and Rama narayanan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil