For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எஸ்.பி.பிக்கு கால்கடுக்க நின்று அஞ்சலி செலுத்திய மயில்சாமி..உன்னதமான ஓர் கதை !

  |

  சென்னை: எஸ்.பி.பி மறைவுக்கு பல ஊர்களில் இருந்து பல ரசிகர்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது நம் அனைவருக்கும் தெரிந்ததே . இருப்பினும் பிரபலங்கள் பலர் கொரானா காலகட்டம் என்பதால் நேரில் செல்லவில்லை .

  Recommended Video

  SPB Prayer meet நினைக்கும் போதே கண்ணீர் வருது Mayilswamy Speech

  இருப்பினும் சில பிரபலங்கள் எதை பற்றியும் கவலைபடாமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மயில் சாமி , நடிகர் அர்ஜுன், இயக்குனர் பாரதிராஜா , விஜய் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் இரங்கலை தெரிவித்தனர் .

  மயில்சாமி அங்கும் இங்கும் ஓடி கொண்டு காவல்துறைக்கு உதவிகொண்டு இருந்தார் . ஒவ்வொரு காவலருக்கும் தனி பட்ட முறையில் நன்றி சொல்லி கொண்டு மிகவும் வேதனையான முகத்துடன் காணப்பட்டார். எஸ்.பி.பி மறைவு மயில்சாமி முகத்தில் பெரும் துயரமாக இருந்ததை அனைவரும் உணர்ந்தனர் .

  முழுக்க முழுக்க மொபைலில் படமாக்கப்பட்ட 'அகண்டன்'.. டீசர் ரிலீஸ் !முழுக்க முழுக்க மொபைலில் படமாக்கப்பட்ட 'அகண்டன்'.. டீசர் ரிலீஸ் !

  குட்டி கதையே இருக்கு

  குட்டி கதையே இருக்கு

  சமீபத்தில் ஒரு புகைப்படத்தை மயில்சாமி அனைவரிடமும் பகிர்ந்தார். அதில் எஸ்.பி.பி திருவண்ணாமலை வந்து பாடிய போது எடுக்க பட்ட போட்டோ கிளிக் . SPBயின் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம். இது பலரின் பார்வைக்கு வந்திருக்காது . இந்த படத்திற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.

  பத்தாம் நாள்

  பத்தாம் நாள்

  நடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர் . எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் .கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள் திருவிழாவில் மனிதர் கோயிலுக்குள் தான் இருப்பார் .

  தயக்கம்

  தயக்கம்

  மயில்சாமிக்கு ஒரு ஆசை . பத்தாம் நாள் திருவிழாவில் மகாதீபம் ஏற்றும் சமயத்தில் ஆலயம் உள்ளே பல நூறு பக்தர்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் SPB யை எப்படியாவது அழைத்து வந்து பக்தி பாடல்களை பாடச்செய்வது என்பதுதான் .அதற்காகவே அடிக்கடி எஸ்பிபி யிடம் வேண்டிக் கொண்டிருப்பார் . எஸ்பிபி கும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும் , முக்கியமான அந்த தீபத்திருவிழாவில் அவர் குரல் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒலிக்க வேண்டும் என்பது விருப்பம் தான் . ஆனால் சுமார் இருபது லட்சம் பேர் கலந்து கொள்ளும் விழாவில் , கூட்டத்தில் எப்படி போவது வருவது என்ற தயக்கம் .

  தங்கும் விடுதி

  தங்கும் விடுதி

  "அண்ணே ... நீங்க வாங்க , உங்களை எப்படியாவது கோயிலுக்குள் அழைத்து செல்வது என் பொறுப்பு " இப்படி மயில்சாமி சொல்ல , ஓகே நான் திருவண்ணாமலைக்கு வரேன் பாடுறேன் என்று ஒப்புக் கொண்டார் எஸ்பிபி பத்தாம் நாள் திருவிழா, மயில்சாமி கோயிலுக்குள் இருக்கும் நேரத்தில் , திருவண்ணாமலைக்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நான் இருக்கிறேன் என்று எஸ் பி பி தகவல் தந்ததும் மயில்சாமி கார் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை நகருக்கு அழைத்து வருகிறார் . அவருக்காக தனியே ஒரு தங்கும் விடுதியில் அறை தயாராக இருக்கிறது .

  நேரம் நெருங்கிக் கொண்டு

  நேரம் நெருங்கிக் கொண்டு

  விடுதியை நோக்கி கார் செல்ல முயலும் போது ஒரு காவலர் தடுக்கிறார் . இந்த வழியாக காரை அனுமதிக்க முடியாது என்று . மயில்சாமி பதறிப்போய் விடுகிறார் . உள்ளே பாலு சார் இருக்கிறார் . அவர் கோயிலுக்கு உள்ளே பாட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காவலர் மறுத்து விட , நல்லவேளை மயில்சாமிக்கு தெரிந்த மற்றொரு காவலர் சூழ்நிலைகளை புரிந்து விடுதிக்கு காரை கொண்டு செல்ல வழி செய்கிறார் .

  கலெக்டர் கந்தசாமி

  கலெக்டர் கந்தசாமி

  விடுதிக்கு எஸ் பி பி வந்து சேர்ந்தாலும் மயில்சாமிக்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய வருத்தத்தை தந்தது . நாம் அவரை வற்புறுத்தி அழைத்து வந்து கோயிலுக்குள் அழைத்து செல்வதில் சிக்கல் உண்டானால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம் , அந்த காவலர் நடந்து கொண்டது மறுபுறம் . நேராக கலெக்டர் சாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை சொன்னார் .அவ்வளவுதான் ... எஸ் பி பி தற்போது எங்கே இருக்கிறார் ? அவரை நம்ம வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள் மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கலெக்டர் கந்தசாமி .

  உதவி செய்தால்

  உதவி செய்தால்

  அங்கிருந்து பாலு சாரை அழைத்துக்கொண்டு மயில்சாமி கலெக்டரின் வீட்டிற்கு சென்று விடுகிறார் . அங்கு பாலு சாருக்கு மிகப்பெரிய மரியாதையும் , உற்சாகமான வரவேற்பு கிடைத்தது . "சொல்லுங்கள் மயில்சாமி நான் என்ன செய்ய வேண்டும் " என்று கலெக்டர் கேட்க, பாலு அண்ணாவை பத்திரமாக கோயிலுக்குள் அவர் பாடல் பாடும் இடம் வரை அழைத்து போக உதவி செய்தால் நன்றாக இருக்கும் சார் என்கிறார் மயில்சாமி .

  பாடல்களை பாடி பாடி

  பாடல்களை பாடி பாடி

  உடனே கலெக்டர் தன்னுடைய காரில் பாலு சாரை ஏற்றிக்கொள்கிறார் . கலெக்டரின் கார் கோயிலை நோக்கி பறக்கிறது சைரன் சத்தத்தோடு . அந்த காட்சியை கற்பனை செய்து பாருங்கள் . ஏகே 47 துப்பாக்கி கொண்ட காவலர்கள் இருவர் உடன் இருக்க , பாலு சாரை பத்திரமாக கோயிலுக்குள் அழைத்து சென்றார் கலெக்டர் கந்தசாமி . அன்றைய நாளில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்த பின்னர் பக்தி பாடல்களை பாடி பாடி கார்த்திகை தீபத்திருவிழா பத்தாம் நாளை பக்தர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றி விடுகிறார் எஸ் பி பி அந்த விழா முடிந்ததும் மயில்சாமிக்கு மனதார நன்றி சொல்கிறார் எஸ் பி பி . பல இலட்சம் பக்தர்கள் கூடியிருந்த திருவிழாவில் இப்படி ஒரு தரிசனம் , இப்படி ஒரு பாடல் பாடும் வாய்ப்பு அமைந்தது உன்னால் தான் என்று நெகிழ்ந்து போகிறார் எஸ்.பி பி.

  English summary
  Interesting information shared by Mayilsamy about SBP
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X