பா.ரஞ்சித் இயக்க போகும் அடுத்த டாப் ஹீரோ...இதுக்கு பின்னால இவ்வளவு இருக்கா ?

சென்னை : ஆர்யாவை வைத்து இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்த படத்தில் நடித்ததால் கேரக்டர்களின் பெயரை வைத்து, படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும் ஃபேமஸ் ஆகி விட்டனர்.

Recommended Video

Sarpatta Parambarai ரங்கன் வாத்தியார் Meme Collections | Oneindia Tamil

சார்பட்டா பரம்பரைக்கு பிறகு அடுத்து காளிதாஸ் ஜெயராமை வைத்து, நட்சத்திரம் நகர்கிறது என்ற ரொமான்ஸ் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் டைரக்டர் பா.ரஞ்சித். இதைத் தொடர்ந்து மாஸ் ஹீரோவான விஜய்யை வைத்து படம் இயக்கலாம் என நினைத்து அதற்காக கதையையும் தயார் செய்து விட்டார்.

2 மொழிகளில் விஜய் படம்

2 மொழிகளில் விஜய் படம்

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், சென்னையில் நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை புகழ்பெற்ற தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்க போவதாகவும், இந்த படம் இரு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது.

பதில் சொல்லாத விஜய்

பதில் சொல்லாத விஜய்

இவரை போல் புகழ்பெற்ற டைரக்டர் பி.வாசுவும் விஜய்யை வைத்து படம் இயக்குவதற்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளார். ஆனால் அது பற்றி விஜய்யிடம் கூறிய போது, அதற்கு விஜய் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.

பா.ரஞ்சித்தும் காத்திருப்பு

பா.ரஞ்சித்தும் காத்திருப்பு

இப்படி விஜய்யிடம் கதை சொல்லி விட்டு, விஜய்யிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்காதா என பல டைரக்டர்கள் காத்துக்கிடக்கிறார்களாம். அப்படி விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் டைரக்டர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவராம். விஜய்யிடம் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை சொல்லி விட்டு, விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கிறாராம்.

விஜய்க்கு பதில் வேறு ஒருவர்

விஜய்க்கு பதில் வேறு ஒருவர்

ஆனால் விஜய்யிடம் இருந்து பதில் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியாததாலும், விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றி வெளியாகும் தகவல் காரணமாகவும் விஜய்யிடம் சொன்ன சூப்பர் ஹீரோ கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்க முடிவு செய்து விட்டாராம் பா.ரஞ்சித்.

விஜய் கதையில் இவரா

விஜய் கதையில் இவரா

விஜய்க்கு பதிலாக ரஞ்சித் படத்தில் நடிக்க போவது வேறு யாருமில்லை. நம்ம சியான் விக்ரம் தானாம். இது பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். எல்லாம் முடிவான பிறகு விரைவில் இந்த படம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படுமாம்.

இவ்வளவு நடந்திருக்கா

இவ்வளவு நடந்திருக்கா

கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் போதே, விக்ரமை வைத்து படம் இயக்கும் ஐடியாவில் இருந்தாராம் ரஞ்சித். ஆனால் அதற்கு பிறகு ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்ததால் விக்ரம் உடனான படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து விட்டாராம் ரஞ்சித். தற்பாது விக்ரம் உடனான படத்தை துவக்க ரஞ்சித் முடிவு செய்துள்ளாராம்.

பொன்னியின் செல்வன் முடிந்தது

பொன்னியின் செல்வன் முடிந்தது

விக்ரம் சமீபத்தில் தான் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது போர்ஷனை முடித்து விட்டதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தார். பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரம், அடுத்தகட்டமாக டப்பிங் உள்ளிட்ட வேலைகளில் இறங்க உள்ளார்.

அக்டோபரில் புதுப்படம்

அக்டோபரில் புதுப்படம்

பொன்னியின் செல்வன் மட்டுமின்றி விக்ரம் ஏற்கனவே நடித்து வரும் மகான், கோப்ரா போன்ற இறுதிக் கட்டத்தில் இருக்கும் படங்களின் வேலைகளை முடித்த பிறகு, ரஞ்சித் இயக்கும் படத்தின் வேலைகளில் விக்ரம் இறங்குவார் என கூறப்படுகிறது. ரஞ்சித் - விக்ரம் இணையும் படம் அக்டோபரில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் தான் தயாரிப்பா

இவர்கள் தான் தயாரிப்பா

ரஞ்சித் இயக்கி வரும் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது படமும் இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. ரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X