Don't Miss!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தோனியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்..கமல்ஹாசன் சுவாரஸ்ய பேச்சு
சென்னை : எதிரி என்ன செய்கிறான் என்று யோசித்துக் கொண்டு இருந்தால் வெற்றி கிடைக்காது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தைத் நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் மூலம் தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாமல் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துள்ளார்.
அவருடைய தயாரிப்பில் இதற்கு முன்பு மற்ற நடிகர்களில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மாதவன் நடித்த நள தமயந்தி, விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
நாயகன் மீண்டும் வர்றார்...உதயநிதியை தயாரிக்கும் கமல்ஹாசன்

விக்ரம்
கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த மாதம் ஜூன் 3ந் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பல்வேறு சாதனைகளை படைத்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. பாகுபலி 2 படத்தின் ஐந்தாண்டு கால சாதனையை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை விக்ரம் படம் சமீபத்தில் படைத்தது.

மகத்தான வசூல்
விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு ஷேர் 100 கோடியைத் தாண்டி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது. அதோடு தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.200 கோடியை நெருங்கும் நிலையில், உலகம் முழுவதுமான வசூல் ரூ.450 கோடியை நெருங்குகிறது.

கமல்ஹாசன் பேச்சு
இந்நிலையில்,சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், கிரிகெட் வீரர் தோனியிடம் பலர் கேட்பார்கள் எப்படி நீங்க இப்படி விளையாடுகிறீர்கள் என்று, தோனி எப்போதும் விளையாட்டை பற்றி மட்டும் தான் யோசிப்பார் வெற்றி பற்றி அல்ல, விளையாட்டை பற்ற மட்டும் யோசித்தால் மட்டுமே பிரஷர் வராது சென்சுரி வரும். அதே போல எதிரி என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டே இருந்தால் நாம் தடுக்கி விழுந்து விடுவோம்.

வாழ்க்கை ரகசியம்
இதுபோன்று பல நபர்கள் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். என்ன இந்த படம் நல்ல ஓடுதோ என்று யோசிப்பதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாலே நமக்கு வெற்றி கிடைக்கும் என்று வாழ்க்கையில் வெற்றி பெறும் ரகசியம் குறித்து அழகாக பேசி உள்ளார் கமல்ஹாசன்.