»   »  'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer

'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித் நடிப்பில் சிவா மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் விவேகம். இப்படம் வருகிற 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது .

ட்ரெய்லர் எப்படி?

ட்ரெய்லர் எப்படி?

ட்ரெய்லர் மூலம் 'விவேகம்', ஆக்க்ஷன் கலந்த மாஸ் படமாக சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அஜித் தலைமையில் ராணுவக் குழுவில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பயிற்சி எடுப்பது போல் 'சர்வைவா...' பாடல் காட்சிகள் வருகின்றன.


அஜித் காஜல் அகர்வாலின் ரொமான்ஸ் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் வருகின்றன. 'உன் கூட இருக்கறது சந்தோஷம்ங்கிறத விட நீதான் என் சந்தோஷமாவே இருக்க' என்ற வசனங்களுக்கு ஹார்ட்டின் ரியாக்‌ஷன் போடுகிறார்கள் ரசிகர்கள்.

அதிரடி சரவெடி

அதிரடி சரவெடி

அதன் பிறகு தான் அதிரடி ஆக்‌ஷன். அக்ஷரா ஹாசன் என்ட்ரி, பைக் சேஸ், ரயில் சண்டை கடைசியாக அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சிகள் என வருவதைப் பார்த்தால் படம் வெளியாகும்போது அரங்கமே அதிரப்போவது நிச்சயம். 'போராடாம அவன் போகவும் மாட்டான். சாகவும் மாட்டான். ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்' என்ற விவேக் ஓபராய் சொல்லும் வசனம் ட்ரெய்லருக்கு இன்னும் சார்ஜ் ஏற்றுகிறது.


குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவு மாஸ் லுக் கொடுக்கிறது என்றால் பின்னணி இசை கிளாஸ்ஸாக இருக்கிறது. மொத்தத்தில் இயக்குனர் சிவாவின் திரைக்கதை அஜித்தின் நடிப்பு என ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் கன்ஃபார்ம்.

வெறித்தன வசனம் :

வெறித்தன வசனம் :

ட்ரெய்லர் தொடங்கியவுடன் 'நீ யார்?' என்று கேட்க, அஜித் 'நான் யார்ங்கிறத எப்பவுமே நான் முடிவு பண்றதில்ல... என் எதிர்ல இருக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்க' என கெத்தாகச் சொல்வதில் ஆரம்பமாகிறது ட்ரெய்லர். அந்த வசனத்திற்கே தல ரசிகர்கள் சிலிர்த்துப்போய், சில்லறையைத் தெறிக்கவிடுகிறார்கள்.

இது அதுவா..?

இது அதுவா..?

மேற்கண்ட டயலாக்குக்கு நதிமூலம், ரிஷிமூலம் தேடிப்போனால் 'அஞ்சான்' படத்தை நோக்கிக் கைகாட்டுகிறது கூகுள். ஆம், 'நான் சாகுறதா இருந்தாலும் அதை நான் தான் முடிவு பண்ணனும்... அதே சமயம், நீ சாகுறதா இருந்தா அதையும் நான் தான் முடிவு பண்ணனும்' என சூர்யா எதிரியைப் பார்த்துச் சொல்கிறார். விவேகம் டயலாக்குக்கு அஞ்சான்ல இருந்து ரெஃபரென்ஸ் எடுத்து உல்டா அடிச்சிருப்பாரோ சிவா..?

சாதனைகளைத் தகர்க்கும் ட்ரெய்லர் :

ட்ரெய்லர் வெளிவந்து 12 மணி நேரத்திற்குள் 20 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். அதுபோக, இதுவரை ட்ரெய்லரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் குறைந்த நேரத்தில் அதிகமானோர் லைக் செய்த ட்ரெய்லர் என இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

English summary
Interesting things on Vivegam Trailer. Vivegam trailer beats all records in indian film history.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil