twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த மாதிரி படத்துக்கெல்லாம் மொழியோ வசனமோ தேவையே இல்லையே: அசந்துபோன ரசிகர்கள்!

    |

    ஈரான்: சர்வதேச திரைப்பட விழாக்களில் ஈரான் நாட்டின் படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    அதேபோல், ஈரானிய குறும்படங்களுக்கும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஒருநிமிட ஈரானிய குறும்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    உண்மையாக காதலியுங்கள் எங்களுக்கும் காதல் வரும்...ஒரு ட்ரான்ஸ்ஜெண்டர் கதை சொல்லும் உண்மையாக காதலியுங்கள் எங்களுக்கும் காதல் வரும்...ஒரு ட்ரான்ஸ்ஜெண்டர் கதை சொல்லும்

    சர்வதேச அரங்கில் ஈரானிய படங்கள்

    சர்வதேச அரங்கில் ஈரானிய படங்கள்

    சர்வதேச திரைப்பட உலகில் ஈரனிய படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகின்றன. கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானில், கமர்சியலான படங்கள் எடுக்க வாய்ப்புகளே கிடையாது. ஆனாலும், அந்நாட்டு படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும் ஏராளம். மொழிகளையும் நிலவியல் சூழல்களையும் கடந்து ரசிகர்களிடம் மிக எளிமையாக சென்றுவிடும் யதார்த்தமான படங்கள் ஈரானில் வெளியாகின்றன. இதனால், உலகம் முழுவதும் திரைப்படங்கள் குறித்த உரையாடல்களில் ஈரானிய படங்களை தவிர்க்கவே முடியாது.

    ஈரானிய இயக்குநர்கள்

    ஈரானிய இயக்குநர்கள்

    ஈரானிய படங்கள் ஆஸ்கர் விருதுகள் வரையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மஜிதி மஜிதி, அப்பாஸ் கியரேஸ்தமி, சாபர் பனாகி, மர்ஜானே சத்ரஃபி போன்ற சிறந்த இயக்குநர்கள், ஈரான் திரைப்படத்துறையில் ஜீனியஸாக ஜொலித்து வருகின்றனர். மஜிதி மஜிதி இயக்கிய 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படம் தான், தமிழ் இயக்குநர் சங்கருக்கு மிகவும் பிடித்த படம் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம்! அதுதான் உண்மை. இத்திரைப்படம் சர்வதேச திரையுலகில், ஒரு மைல் கல் எனலாம். இதுவே தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நிமிட குறும்படம்

    ஒரு நிமிட குறும்படம்

    இந்நிலையில், தற்போது ஒருநிமிடம் மட்டுமே ஒடக்கூடிய ஈரானிய குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துகொள்ள உதவுகிறது. 'Father, Daugther and Shopkeeper' என்ற பெயரில் வெளியான இந்த குறும்படம் இப்படியாக திரையில் விரிகிறது. தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழை தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார். அதை பார்த்துவிடும் கடை உரிமையாளர், அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார்.

    சூழ்நிலை கைதி

    சூழ்நிலை கைதி

    இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள். இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, மனம் கலங்கி மன்னிப்புக் கேட்க முடிவெடுக்கிறார்.. ஆனால் அந்த கடை உரிமையாளரோ, அந்தச் சிறுமியிடம் "உன் தந்தை பணம் கொடுத்துவிட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்". என சொல்லிவிட்டு, கொஞ்சம் பணத்தையும் அந்த ஏழைத் தந்தையிடம் தருகிறார்.

    அன்பு சூழ் உலகு

    அன்பு சூழ் உலகு

    குற்றஉணர்வில் மூழ்கியவராக தன் தலையை குனிந்தபடி அந்த ஏழைத் தந்தை கடையை விட்டு வெளியேற முயல்கிறார். அப்போது கடையில் இருக்கும் வாடிக்கையாளர் ஒருவர், ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு, "நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீங்களே, தயவுசெய்து, எடுத்துச் செல்லுங்கள்." என அதனை அவரிடம் கொடுக்கிறார். அதையும் கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார் அந்த ஏழைத் தந்தை

    பசியும் பட்டினியும்

    பசியும் பட்டினியும்

    800 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களில், கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பசியுடனே படுக்கைக்குச் செல்வதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதேபோல், உலகத்தில் பசிக்கொடுமை அதிகரிக்கின்ற மொத்தமுள்ள 116 நாடுகளில், இந்தியா 101வது இடத்தை பிடிக்கிறது. இப்படி பசிப் பட்டினியால் அவதிப்படும் மக்களின் வலிகளை புரிந்துகொள்ள வைக்கிறது இந்த குறும்படம். மேலும், மனித நேயத்தை விட சிறந்த மதம் எதுவும் இல்லையென்பதையும், மொழிகள் கடந்து உணர வைக்கிறது. இந்த குறும்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Award-winning Iranian Short Film - Father , Daugther, and Shopkeeper ( சர்வதேச விருதுகளை வென்று கவனம் ஈர்க்கும் ஈரானிய குறும்படம் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X