twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச நண்பர்கள் தினம்: ”ஏன்னா நீ என் நண்பன்” 90ஸ் கிட்ஸின் சிறந்த 5 நண்பர்கள் திரைப்படம்

    |

    சென்னை: திரைப்படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன.

    நண்பர்கள் பற்றியும் நட்பு குறித்தும் உருவாகும் திரைப்படங்கள் மிகவும் குறைவு தான்.

    தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப்பை பின்னணியாக கொண்டு வெளியான படங்களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த 5 படங்களின் பட்டியல் இதோ.

    மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா..அந்த டாப் நடிகர் தான் ஹீரோ!மலையாளத்தில் அறிமுகமாகும் சமந்தா..அந்த டாப் நடிகர் தான் ஹீரோ!

    முதலிடத்தில் என்றுமே சூப்பர் ஸ்டார்

    முதலிடத்தில் என்றுமே சூப்பர் ஸ்டார்

    90ஸ் கிட்ஸின் ஆல்டைம் ஃபேவரைட் மூவி என்றால் அது, சூப்பர் ஸ்டார் ரஜினியும், மெகா ஸ்டார் மம்முட்டியும் இணைந்து மிரட்டிய 'தளபதி' படம் தான். மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தின் வசனங்கள், பின்னணி இசை, மேக்கிங் என அனைத்துமே அல்டிமேட் ரகம். ரஜினியும் மம்முட்டியும் உயிருக்கு உயிரான நண்பர்களாக தங்களது கேரக்டரில் வாழ்ந்திருந்தனர். "ஏன்னா நீ என் நண்பன்" இந்த வசனமும் 'காட்டுக்குயிலே மனசுக்குள்ளே' பாடலும் மட்டுமே போதும், தளபதி படத்தை வெறித்தனமாக ரசிகர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என தெரிந்துகொள்ளலாம்.

    இரண்டாவது இடம் மாணிக் பாட்ஷாவிற்கு தான்

    இரண்டாவது இடம் மாணிக் பாட்ஷாவிற்கு தான்

    நண்பர்கள் பற்றி வெளியான படங்களில் ரஜினியின் தளபதிக்குப் பிறகு, 90ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த இரண்டாவது படமாக இருப்பது 'பாட்ஷா.' ரஜினியின் கேரியரில் இனி இப்படி ஒரு படமே வராது என்றபடி, மரண மாஸ் காட்டிய படம் 'பாட்ஷா.' இது கேங்ஸ்டர் ஜானரில் ஆக்சன் படமாக இருந்தாலும், ரஜினி மாணிக்கமாக இருந்து மாணிக் பாட்ஷா என்ற கேங்ஸ்டராக மாற காரணம் நட்பு தான். நண்பனை கொன்றவர்களை பழிவாங்கவே ரஜினி பாட்ஷாவாக மாறுவதால், இந்தப் படத்தை 90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடினர்.

    முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்

    முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்

    90ஸ் கிட்ஸ்களிடம் பேண்டஸியாக நட்பை பேசிய திரைப்படம் என்றால் அது 'காதல் தேசம்' தான். அப்பாஸ், வினித், தபு ஆகியோர் நடிப்பில் கதிர் இயக்கியிருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ,.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'முஸ்தபா முஸ்தபா' என்ற ஒரே பாடலுக்காக, படம் வெள்ளிவிழா கொண்டாடியது. இன்றுவரையில் கல்லூரி நண்பர்களின் ஃபேர்வெல் டே பாடலாக ஒலிப்பதும் இப்பாடல் தான்.

    விஜய் சூர்யாவின் ப்ரெண்ட்ஸ்

    விஜய் சூர்யாவின் ப்ரெண்ட்ஸ்

    விஜய் முன்னணி நடிகராக வலம்வரத் தொடங்கிய காலக்கட்டத்தில் வெளியான 'ப்ரெண்ட்ஸ்' திரைப்படம், 90ஸ் கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டது. விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா நண்பர்களாக நடித்திருந்தனர். நண்பனுக்காக எதையும் செய்யும் துணிச்சலான பாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். காமெடி, சென்டிமெண்ட் என தூள் கிளப்பியது இந்தப் படம்.

    சேரனின் ஆட்டோஃகிராப்

    சேரனின் ஆட்டோஃகிராப்

    இதே வரிசையில் சேரனின் 'ஆட்டோஃகிராப்' படமும் 90ஸ் கிட்ஸ்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கதையின் படி சேரனின் பழைய காதல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக திரையில் விரியும். ஆனால், இறுதியாக சேரன் - சினேகா இருவருக்குமான நட்பு, இந்தப் படத்தில் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆண், பெண் நட்பை ரொம்பவே யதார்த்தமாக காட்டியதற்காக, காதல் படமாக இருந்தாலும், அதிலும் ஒரு தெய்வீகமான நட்பு இருப்பதாக,க் கூரி 'ஆட்டோஃகிராப்' படத்தையும் கொண்டாடுகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.

    English summary
    International Friends Day: ”Enna Nee en Nanban” Top 10 Friends Movies of 90s Kids
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X