»   »  'வேலைக்காரன்' சிவா ஹேப்பி அண்ணாச்சி: காரணம் இறைவா...

'வேலைக்காரன்' சிவா ஹேப்பி அண்ணாச்சி: காரணம் இறைவா...

Posted By:
Subscribe to Oneindia Tamil
வேலைக்காரன்' சிவா ஹேப்பி அண்ணாச்சி- வீடியோ

சென்னை: வேலைக்காரன் படத்தின் இறைவா லிரிக்கல் வீடியோவை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Iraiva lyrical video crosses 5 million views

வேலைக்காரன் டிசம்பர் வெளியீடு என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்காரன் குழு மகிழ்ச்சியில் உள்ளது. காரணம் அனிருத் இசையமைத்து பாடிய இறைவா லிரிக்கல் வீடியோவை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

10 லட்சம் பேர் பார்த்தபோதே அனிருத் பெருமகிழ்ச்சி அடைந்து அது குறித்து ட்வீட்டினார். இந்நிலையில் அந்த எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

English summary
Sivakarthikeyan starrer Velaikkaran's Iraiva lyrical video has crossed 5 million views. This is the first time Nayanthara has shared the screen space with Sivakarthikeyan and fans couldn't wait anymore to see the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil