»   »  சி.வி.குமாருக்கு கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார்- ஞானவேல் ராஜா

சி.வி.குமாருக்கு கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார்- ஞானவேல் ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார் என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார்.

இறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ்க்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா இந்த விவகாரம் குறித்து வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.


Iraivi Issue: Producer Gnanavel Raja Whats app audio Message

அதில் ''எத்தனையோ வருடங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்தது.


சினிமாவுக்கு வந்த 6 மாதங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. சி.விகுமார் என்னும் புது தயாரிப்பாளர் அவருடையக் கதையைக் கேட்டு, பிடித்துப்போய் அந்தக் கதையை படமாக எடுக்க ரிஸ்க் எடுத்து ஓர் இயக்குநராக அவரை உருவாக்கிவிட்டார்.


சொன்ன பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் இந்தப் படத்தை கார்த்திக் எடுத்திருக்கிறார். கார்த்திக்கின் முந்தைய இயக்குநர் கதிரேசன் பட்டதை விட 2 மடங்கு கஷ்டத்தை இறைவியில் சி.வி.குமார் அனுபவித்திருக்கிறார்.


இந்தப் படம் நிச்சயமாக ஒரு தயாரிப்பாளரை உருவகப்படுத்திய படம் தான். இது யாருக்கு வலியோ இல்லையோ, அந்தப் படத்தைப் பார்க்கும் போது கார்த்திக்கை அறிமுகப்படுத்திய சி.வி.குமாருக்கு மிகப்பெரிய வலியைக் கொடுத்திருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.


அதே நேரம் இப்படத்தைத் தயாரிக்கும் போதே சி.வி.குமார், ஞானவேல் ராஜா இருவருக்கும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளரை அவமானப்படுத்தியது தெரியவில்லையா? என்று கார்த்திக் சுப்புராஜ்க்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.

English summary
Producer Gnanavel Raja Explain Iraivi Issue in Whats-app audio Message.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil