»   »  'இறைவி இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம்'...கார்த்திக் சுப்புராஜைப் பாராட்டும் ரசிகர்கள்

'இறைவி இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம்'...கார்த்திக் சுப்புராஜைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் விஜய், சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் இறைவி.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் பெண்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் என்று படக்குழு விளம்பரம் செய்திருந்தது.


இந்நிலையில் இறைவி பெண்களை பெருமைப்படுத்தியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.


இந்த வருடம்

இறைவி இந்த வருடத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி தங்கள் நடிப்பால் நம்மைக் கவர்கின்றனர். எல்லாப் புகழும் கார்த்திக் சுப்புராஜ்க்கே என்று கிறிஸ்டோபர் பாராட்டியிருக்கிறார்.


கிளைமாக்ஸ்

படத்தை இனிதாக முடிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் மோசமான ஒரு கிளைமாக்ஸைக் கார்த்திக் சுப்புராஜ் தேர்ந்தெடுத்துள்ளாரே? என்று கார்த்திக் வருத்தப்பட்டிருக்கிறார்.


வார்த்தைகளால் விவரிக்க

சில படங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அதில் இறைவியும் ஒன்று என்று அருண் ரமேஷ் பாராட்டியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ்

இறைவி கார்த்திக் சுப்புராஜ்க்கு பொருத்தமான படம். அனைவரின் நடிப்பும் அழுத்தமாக இருந்தது என்று ராஜேஷ் செல்வராஜ் பாராட்டியிருக்கிறார்.


பயங்கரம்

இறைவியில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா இருவரும் தங்களுடைய நடிப்பால் மிரட்டுகின்றனர் என்று அக்ஷய் பாராட்டியிருக்கிறார்.


இதுபோல மேலும் பல ரசிகர்களும் படம் நன்றாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
English summary
Vijay Sethupathi-Anjali Starrer Iraivi Released Today Worldwide. Written and Directed by Karthik Subbaraj - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil