»   »  முதல் படத்தைப் போன்றே பயமாக இருக்கிறது- கார்த்திக் சுப்புராஜ்

முதல் படத்தைப் போன்றே பயமாக இருக்கிறது- கார்த்திக் சுப்புராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமெங்கும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் கார்த்திக் சுப்புராஜின் இறைவி வெளியாகவிருக்கிறது.

பீட்சா, ஜிகர்தண்டா என அடுத்தடுத்து 2 ஹிட்களைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 3 வதாக உருவாகியிருக்கும் படம் இறைவி.


Iraivi Release 300 Screens

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி என முன்னணி நடிக்க, நடிகையர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.


வருகின்ற 3 ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை, சி.வி.குமார் தன்னுடைய திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.


தமிழகம் முழுவதும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் இறைவி வெளியாகிறது. இப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை ஜாஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.


''என்னுடைய ஒவ்வொரு படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் இப்படத்துக்கு இறைவி என்று பெயர் வைத்தோம்.


2 படங்களை இயக்கிய அனுபவம் இருந்தாலும் முதல் படத்தைப் போன்றே பயமாக இருக்கிறது'' என்று இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகிறார்.


இறைவி படத்துடன் எழிலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படமும் வெளியாகிறது. பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் முந்தப் போவது செண்டிமெண்டா இல்லை காமெடியா? பார்க்கலாம்.

English summary
Karthik Subbaraj's Iraivi Released more than 300 Screens in Tamil Nadu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil