»   »  சூர்யாவுடன் இணையும் விஜய் சேதுபதி

சூர்யாவுடன் இணையும் விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: '24' படத்துடன் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' டிரெய்லரும் சேர்ந்து வெளியாகும் என கூறப்படுகிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் '24' மே 6 ம் தேதி வெளியாகிறது. சூர்யா 3 கெட்டப்புகளில் நடித்திருப்பதால் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


Iraivi Theatrical Trailer Attached with 24

மறுபுறம் பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் 'இறைவி'. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி என்று முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.


2 வெற்றிப் படங்களுக்கு பின் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 'இறைவி' திரைப்படம் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


இந்நிலையில் சூர்யாவின் '24' படத்துடன் 'இறைவி' படத்தின் டிரெய்லரை படக்குழு இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சூர்யாவின் '24' நாளை மறுநாள் உலகம் முழுவதும் சுமார் 2200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.இதனைக் கருத்தில் கொண்டே 'இறைவி' டிரெய்லரை சூர்யாவின் '24' படத்துடன் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.


நீண்ட நாட்களாகியும் 'இறைவி' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Iraivi theatrical trailer to be attached with Surya's 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil