twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறைவி... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?

    By Mayura Akilan
    |

    சென்னை: இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை என்று நடிகையும் இயக்குநரும் டிவி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    பீட்ஷா, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் இறைவி. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    Iraivi too much violence says Lakshmi Ramakrishnan

    இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் தயாரிப்பாளர்கள் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. படத்தைப் பற்றி பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. சாரு நிவேதிதா படு பயங்கரமாக விமர்சனம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

    இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இறைவி படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில் "என்னை பொறுத்தவரை இறைவி படத்தில் அழுத்தமான பெண்கள் கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஏராளமான வன்முறை மற்றும் படத்தில் வரும் திருப்பங்களும் சரியில்லை.

    மேலும், பாபிசிம்ஹா கதாபாத்திரம் முற்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்தது. அவர் ஒரு கல்லூரி மாணவர் போல் இருக்கிறார். திடீரென பெண்களை ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    மோசமான டேஸ்டா?

    இதேபோல எனக்கு ரோஜா, மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன், தெனாலி, தேவர்மகன், பஞ்சதந்திரம், அன்பே சிவம், 16 வயதினிலே திரைப்படங்களும் பிடிக்கும். இது மோசமான டேஸ்டா? என்றும் கேட்டிருக்கிறார். இந்தப்படங்களை விரும்புபவர்கள் மோசமான டேஸ்ட் கொண்டவர்கள் என்று யாராவது கூறி அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பதிவை போட்டிருக்கிறாரோ லட்சுமி ராமகிருஷ்ணன்.

    English summary
    Iraivi did not come across as a film with strong female characters, too much violence, twist was horrible says Director and Actress Lakshmi Ramakrishnan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X