»   »  ட்ரெண்டிங்கில் இறைவி... பெண்கள், குழந்தைகளோடு பார்க்க முடியுமா?

ட்ரெண்டிங்கில் இறைவி... பெண்கள், குழந்தைகளோடு பார்க்க முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியாகியிருக்கும் இறைவி திரைப்படம் கார்த்திக் சுப்புராஜுக்கு தேர்ந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தாலும் பெண்கள் குழந்தைகளுடன் பார்க்க முடியாது என்ற கருத்து பரவி வருகிறது.

குறிப்பாக பெண்களை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதையில் 3 ஹீரோக்கள் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


#iraivitalkofthetown Hashtag Trend

அதே நேரம் இறைவி என்று பெயர் கொண்ட இந்தப் படத்தை பெண்கள் திரையரங்குகளில் அமர்ந்து பார்க்க முடியவில்லை என்றும் குறைப்பட்டுள்ளனர்.


ஏ செண்டர் ஆடியன்ஸைக் கவர்ந்த இறைவி பி, சி சென்டர்களில் பெரிதும் எடுபடவில்லை. இன்னும் கிராமப்புறங்களில் இப்படத்திற்கான வரவேற்பு எந்தளவு இருக்கும் என்பது தெரியவில்லை.


பெரும்பாலான படங்கள் யூ சான்றிதழ் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கையில், தன் படைப்பில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாமல் கார்த்திக் சுப்புராஜ் யூ/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டிருப்பது அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது.


இந்தப் படத்துக்கு இருந்த அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு காரணமாக படம் தேசிய அளவில் சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

English summary
Karthik Subbaraj Iraivi now Trend Nationwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil