»   »  இரண்டாம் உலகம்... செல்வராகவனை வெறுப்பேற்றும் விமர்சனங்கள்!

இரண்டாம் உலகம்... செல்வராகவனை வெறுப்பேற்றும் விமர்சனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக, தமிழ் சினிமா விமர்சனங்களை ரொம்பவே வெறுப்பவர் செல்வராகவன், அதாவது அவர் படங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களை!

துள்ளுவதோ இளமை படத்துக்கு பிரபல பத்திரிகை எழுதிய விமர்சனத்தில், 'பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. அதற்காக உன்னதமான சினிமாவை இவ்வளவு கேவலப்படுத்த வேண்டுமா?' என்று எழுதியிருந்தது.

Irandam Ulagam gets negative reviews

அன்றைக்கு ஆரம்ப நிலையில் இருந்த இணையதளங்களும் படத்தை விட்டு வைக்கவில்லை. அன்று முதல் ஆரம்பித்து அவரது விமர்சன வெறுப்பு.

அவரது அடுத்த படமான காதல் கொண்டேனை கொண்டாடின அதே பத்திரிகைகளும் மீடியாவும். அப்போதும் வேண்டா வெறுப்பாகவே நடந்துகொண்டார்.

அடுத்து வந்த 7ஜி படத்தையும் பாராட்டின. படமும் பெரிய வெற்றி பெற்றது. புதுப்பேட்டை படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் ஓடவில்லை.

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள். அந்தப் படத்தில் அடிப்படைத் தவறுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட செல்வராகவன், அதை ஏன் அவ்வளவு பெரிசு படுத்த வேண்டும். தமிழ் இயக்குநர் ஒருவர் இந்த அளவு முயற்சி எடுப்பதை ஏன் பாராட்ட மறுக்கிறார்கள் என்றார்.

மயக்கம் என்ன படத்துக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி கமெண்டுகள், விமர்சனங்கள்தான்.

இப்போது இரண்டாம் உலகம். இந்தப் படம் வெளியாகும் முன்பே மீடியா விமர்சனங்கள் குறித்த தனது குமுறல்களை வெளியிட்டிருந்தார்.

'ஹாலிவுட்டிலிருந்து எந்த மாதிரி படங்களை வெளியிட்டாலும் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழில் எவ்வளவு உயர்ந்த முயற்சியாக இருந்தாலும் கேலி செய்து நம்மை காலி பண்ணுகிறார்கள்... எனக்கு படம் எடுக்கவே பிடிக்கவில்லை. இரண்டாம் உலகமே கூட எனது கடைசி படமாக இருக்கும்' என்றெல்லாம் புலம்பித் தள்ளியிருந்தார்.

இதோ.. இன்று பல்வேறு தடைகள் தாண்டி இரண்டாம் உலகம் வெளியாகி, அதுகுறித்து சமூக வலைத் தளங்களில் உடனுக்குடன் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

பெரும்பாலானவர்கள் படம் குறித்து எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்களையே வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து செல்வராகவன் எப்படியெல்லாம் குமுறப் போகிறாரோ தெரியவில்லை!

நீங்கள் இரண்டாம் உலகம் படம் பார்த்துவிட்டீர்களா... உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்... ஒன்இந்தியாவின் சிறப்பு விமர்சனம்... நாளை!

English summary
Selvaragavan's new release Irandam Ulagam gets mostly negative reviews in Tamil.
Please Wait while comments are loading...