»   »  போங்கயா நீங்களும் உங்க சட்டமும்: டிரம்பை கண்டித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த இயக்குனர்

போங்கயா நீங்களும் உங்க சட்டமும்: டிரம்பை கண்டித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ள இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாதி அதிபர் டிரம்பின் மனிதத் தன்மையற்ற சட்டத்தை சாடியுள்ளார்.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியை துவங்கும்போதே அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை சாடினார்.

வெளிநாட்டு மொழி

வெளிநாட்டு மொழி

சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு லேண்ட் ஆப் மைன்(டென்மார்க்), எ மேன் கால்ட் ஓவ்(ஸ்வீடன்), தி சேல்ஸ்மேன்(ஈரான்), டான்னா(ஆஸ்திரேலியா), டோனி எர்ட்மேன்(ஜெர்மனி) ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

தி சேல்ஸ்மேன்

தி சேல்ஸ்மேன்

ஈரானை சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹதி இயக்கிய தி சேல்ஸ்மேன் படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விருதை வாங்க அவர் நேரில் வரவில்லை.

விருது

விருது

ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இந்நிலையில் தான் அஸ்கர் விருதை வாங்க அமெரிக்கா வரவில்லை. டிரம்பின் சட்டத்தை கண்டித்தே அவர் ஆஸ்கர் விழாவை புறக்கணித்துள்ளார்.

சட்டம்

அஸ்கருக்கு பதில் விருதை வாங்கிய அனௌஷே அன்சாரி அஸ்கர் எழுதிக் கொடுத்த கடிதத்தை வாசித்தார். அதில் அஸ்கர் கூறியிருப்பதாவது, இந்த விருதை இரண்டாவது முறை பெறுவதில் பெருமைப்படுகிறேன். இன்று விழாவில் கலந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். என் நாடு மற்றும் 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து மனிதநேயமற்ற சட்டத்தால் அவமதிக்கப்பட்டுள்ளனர். அந்த 7 நாடுகளை சேர்ந்தவர்களை மதித்து நான் விழாவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

English summary
Iranian director Asghar Farhadi's movie The Salesman has emerged as winner in the foreign language movie section in the Oscars function. But he boycotted the function condemning Trump's inhumane law.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil