இரவின் நிழல் படத்தில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.. அதுவும் ஒரு ட்ரிக் தான்.. பிரிகிடா பளிச்!
சென்னை: இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் பிரிகிடா நிர்வாணமாக நடித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த காட்சியில் தான் நிர்வாணமாக நடிக்கவில்லை என்றும் அது ஒரு ட்ரிக் என்று கொடுத்துள்ள பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் இரவின் நிழல் என நடிகர் பார்த்திபன் அறிவித்து இருந்த நிலையில், அதற்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் பெரிய பஞ்சாயத்தையே ஒரு வாரத்திற்கு நடத்தினார்.
'சேரி' மக்கள் அசிங்கமாத்தான் பேசுவாங்கன்னு சொல்லி சர்ச்சையில் சிக்கிய நடிகை பிரிகிடா நிர்வாணமாக நடித்ததற்கு எதிராகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

இடைவிடாத உழைப்பு
இயக்குநர் பார்த்திபன் மற்றும் அவரது ஒட்டுமொத்த இரவின் நிழல் குழுவின் இடைவிடாத உழைப்பு காரணமாக 22 டேக்குகளுக்கு பிறகு சிங்கிள் ஷாட் படமாக உருவானது இரவின் நிழல். ஒரே இடத்தில் எல்லாம் எடுக்காமல், ஒரு பெரிய இடத்தில் ஏகப்பட்ட செட்களை அமைத்து, இயக்குநரே ஹீரோவாகவும் நடித்துக் கொண்டே இப்படியொரு பிரம்மிப்பான படத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக கொடுத்த நிலையில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களால் பாராட்டுக்களை பெற்றார்.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி
ஆனால், இந்த படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் இல்லை என்றும் ஈரானிய திரைப்படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் என்றும் அதை மறைத்து பார்த்திபன் மக்களை ஏன் ஏமாற்றுகிறார் என்று கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அவரை வச்சு செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை எல்லாம் போட்டு தரமான சம்பவம் செய்து விட்டனர்.

நிர்வாணமாக நடிக்கல
இந்த படத்தில் பவி டீச்சராக நடித்து பிரபலமான பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்ததாக பஞ்சாயத்துக்கள் கிளம்பின. சில பேட்டிகளில் அவரிடம் கேட்கும் போது, அந்த ஒரு காட்சியில் நடிக்கத் தான் ரொம்பவே தயங்கியதாகவும், பெற்றோர்களிடம் பார்த்திபன் சார் தான் பேசி கன்வின்ஸ் செய்தார் என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது மற்றொரு பேட்டியில், நான் நிர்வாணமாகவே நடிக்கல பாஸ், அது ஒரு ட்ரிக் என பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

டிரெஸ் போட்டிருந்தேன்
அந்த ஷாட்டில் நடிக்க ரொம்பவே குட்டியான டிரெஸ் போட்டிருந்தேன். அது ஒரு எலாஸ்டிக் மாதிரி இருக்கும், அதை இழுத்து விட்டால், டிரெஸ் போட்டிருப்பது போல தெரியாது. ஆனால், அந்த அளவுக்கு குட்டியான உடையை அணிந்து நடிக்கவே ரொம்பவே கூச்சப்பட்டேன். ஆனால், அதை பலரும் நான் நிர்வாணமாக நடித்ததாகவே நினைத்து விட்டனர். உண்மையில், அது ஒரு சீட் ஷாட் தான் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை என அந்தர் பல்டி அடித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











