For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தப்பா பேசிவிட்டேன்..மன்னித்துவிடுங்கள்..கண்கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா!

  |

  சென்னை : தப்பா பேசிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று இரவின் நிழல் பட நாயகி பிரிகிதா செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கினார்.

  வித்தியாச விரும்பி பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரு தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் பார்த்திபனின் திறமையை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

  வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

  காவிய கவிஞர் வாலி நினைவு தினம்...இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் அவரை மிஸ் பண்ணுவீங்க காவிய கவிஞர் வாலி நினைவு தினம்...இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் அவரை மிஸ் பண்ணுவீங்க

  இரவின் நிழல்

  இரவின் நிழல்

  இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி இதில் அறிமுகமாகியுள்ளார்.

  கெட்டவார்த்தை பேசுவார்கள்

  கெட்டவார்த்தை பேசுவார்கள்

  இரவின் நிழல் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதை பற்றி பேசிய நடிகை பிரிகிடா, இந்த படத்தின் கதையே தனி மனிதன் வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடக்கிறது. அதை ராவா சொன்னால் தான் புரியும், நாம ஒரு சேரிக்கு போனால் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு எப்படி பேசுவார்கள் என்று பேசியிருந்தார்.

  பார்திபன் மன்னிப்பு கேட்டார்

  பார்திபன் மன்னிப்பு கேட்டார்

  சேரி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள் என நடிகை பிரிகிடா கூறியதற்கு இணையத்தில் மிகப்பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. அவரை கைது செய்ய வேண்டும் என்றும், சாதி வெறிப்பிடித்தவர் என்றும் பலவிதமாக கருத்துக்கள் இணையத்தில் பரவியது. அந்த வார்த்தையை சொன்னதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் பிரிகிடா. அதேபோல பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பார்த்திபனும் மன்னிப்பு கேட்டிருந்தார்.

  #ArrestBrigida

  #ArrestBrigida

  இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரிகிடா, நான் வேண்டும் என்றே அப்படி பேசவில்லை, படத்திற்கு அது போன்ற வசனம் தேவை என்பதை உணர்ந்துவதை சொல்ல வந்தேன். ஆனால் அந்த வார்த்தை தவறானதாக மாறிவிட்டது. இணையத்தில், #ArrestBrigida என்ற ஹேஷ் டேக்கை பார்க்கும் மனம் மிகவும் வேதனை அடைகிறது.

  Recommended Video

  Actress Sneha | முதல் படம் A. R. Rahman இசையில் நடித்தது என்னோட Luck | *Interview
  வருத்தமளிக்கிறது

  வருத்தமளிக்கிறது

  நான் நடித்த முதல் படம் வெற்றி பெற்றிருக்கிறது சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் மனசு வேதனையில் இருக்கிறது. என்னை ஜாதி வெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள் அதை எல்லாம் கேட்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இரவின் நிழல் ஷ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்ட படமாகும், படத்தில் நிறைய லொகேஷன்கள் வருகின்றன அதைத்தான் ரொம்ப ராவா இருக்கும் என்று சொல்லிவிட்டேன். சரியான விளக்கத்தை சொல்லாமல் விட்டது என்னுடைய தவறுதான். தப்பாக பேசி இருக்கக் கூடாது. தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என கலங்கிய கண்களுடன் கூறினார்.

  English summary
  iravin nizhal actress brigida saga apologizes for her disparaging comments on slums
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X