Just In
- 8 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 54 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே டேக்கில் படமாகும் இரவின் நிழல்.. வித்தியாச விரும்பியின் அடுத்த முயற்சி!
சென்னை : வித்தியாச விரும்பி பார்த்திபனின் அடுத்த படம் 'இரவின் நிழல்', இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அவர், இந்த படத்தை ஒரே டேக்கில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர் நடிகர் பார்த்திபன். ஹவுஸ்ஃபுல், குடைக்குள் மழை என இவரது படங்கள் உலக சினிமா பார்வையாளர்களின் ஆவளைத் தூண்டி விடுகிறது.

உலக திரைப்பட சாதனை முயற்சியாக பார்த்திபனால் உருவாக்கப்பட்ட படம் தான் ஒத்த செருப்பு படம். இந்த படத்தில் இவரைத் தவிர வேறு நடிகர்கள் யாரும் கிடையாது படம் முழுக்க இவர் மட்டுமே நடித்துஇருப்பார், ஆனால் ஆங்காங்கே குரல்கள் மட்டுமே கேட்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியல் இடம் பிடித்தது.
ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்க போகும் படம் தான் இரவின் நிழல், புத்தாண்டை ஒட்டி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்திபன் வெளியிட்டார். இவர் இந்த படத்தை நடித்து இயக்கவும் இருக்கிறார்

1999ம் ஆண்டு வெளிவந்த ஹவுஸ் புல் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்டபடமாகும். அடுத்து, ஒத்த செருப்பு படம் ஒரு அறையில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லிங்காக கொண்டு சென்று காட்சியிலும் மிரட்டி இருப்பார். இந்த படத்தை அடுத்து பார்த்திபன் இயக்க போகும் படம் தான் இரவின் நிழல் இந்த படத்தையும் ஒத்த செருப்பு படத்தை போல ஒரு வித்தியாசமான முயற்சியில் எடுக்க உள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். அது என்ன வித்தியாசனமான முயற்சி என்றால் , படத்தை ஓரே டேக்கில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட பார்த்திபன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 24ல் வெளியாகப் போகுது சைக்கோ.. மிஸ்கின் குஷி
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் பார்த்திபன். அந்த படம் வெற்றி பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதே நேரத்தில் இயக்குனராக மட்டும் இல்லாமல் பல படங்களிலும் நடித்து வந்தார். இவர் இயக்கும் படங்கள் தனித்துவம் வாய்ந்த படமாக இருக்கும் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே , சரிகம பதனி, புள்ளகுட்டிகாரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை , பச்சக்குதிர, வித்தகன், கதை திரைக்கதை வசனம் இயக்கும் மற்றும் தற்போது எடுத்த ஒத்த செருப்பு ஆகும் .
ஆசிய அளவில் முதன்முதலில் சிங்கிள் சாட் படமாக உருவாக இருக்கிறது இரவின் நிழல் . இந்த படத்தை பற்றிய தகவலை பார்த்திபன் அடுத்தடுத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழ் சினிமாவில் இப்படி பட்ட புது முயற்சிகளுக்கு நிச்சம் வரவேற்பு இருக்கும்.