Don't Miss!
- News
"3 பஸ் அளவுக்கு பெருசு.." சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தாமல் இருப்பது ஏன் தெரியுமா! பரபர
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இரவின் நிழல், கார்கி, தி வாரியர், மைடியர் பூதம் ரிலீஸ்.. இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யாரு?
சென்னை: இந்த வாரம் இரவின் நிழல், கார்கி, தி வாரியர், மை டியர் பூதம் மற்றும் டிரான்ஸ் படத்தின் டப்பிங்கான நிலை மறந்தவன் உள்ளிட்ட 5 படங்கள் வெளியானது.
Recommended Video
இதில், இரவின் நிழல் மற்றும் கார்கி உள்ளிட்ட இரு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ஆனால், வசூல் ரீதியாக இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமித்துள்ளது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி உள்ள ராம் பொத்தினேனியின் தி வாரியர் படம் தான்.

இரவின் நிழல் வசூல்
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்கிற அறிவிப்புடன் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் நேற்று வெளியானது. வரலக்ஷ்மி சரத்குமார், பிரிகிடா, சாய் பிரியங்கா ருத் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் முதல் நாளில் 70 லட்சம் முதல் 90 லட்சம் மட்டுமே பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை படம் பிக்கப் ஆனால் மட்டும் தான் போதுமான வசூல் ஈட்டும் நிலை உள்ளது.

கார்கி வசூல்
சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள சாய் பல்லவியின் கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படமாக பார்த்தால் இரவின் நிழல் படத்தை விட கார்கி அற்புதம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த படம் முதல் நாளில் 1.10 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மை டியர் பூதம் வசூல்
பிரபுதேவா, ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வத் நடிப்பில் நேற்று வெளியான மை டியர் பூதம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிதாக சாதிக்கவில்லை. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு படமாக வெளியாகி உள்ள இந்த படம் முதல் நாளில் வெறும் 30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த படம் ரிலீசுக்கு முன்பே ஓடிடி உரிமம் மற்றும் இந்தி ரீமேக் உரிமம் மூலமாக 7 கோடிக்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தியேட்டர் வசூல் போனஸ் மட்டும் தான் என்கின்றனர். ஆனால், படத்தை வாங்கி தியேட்டரில் வெளியிட்டவர்களுக்கு லாபம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

பாக்ஸ் ஆபிஸ் வின்னர்
இந்த வாரம் வெளியான திரைப்படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் வின்னராக தி வாரியர் திரைப்படம் மாறி உள்ளது. முதல் நாளில் இந்த படம் 10 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவே அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி மற்றும் ஆதி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படம் எந்த அளவுக்கு வீக்கெண்டில் வசூல் செய்யும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.