இரவின் நிழல் இல்லை.. இந்த படம் தான் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், அந்த படம் இல்லைங்க, அதற்கு முன்பாகவே ஒரு ஈரானிய படம் அப்படி வந்துருக்கு என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த வாரம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை வம்பிழுத்த இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனுக்கு இந்த வாரம் பார்த்திபனின் இரவின் நிழல் தொக்காக மாட்டி உள்ளது.

மேலும், இரவின் நிழல் படத்தையும் தனது விமர்சனத்தில் கிழித்துத் தொங்கவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

பார்த்திபனின் உழைப்பு

பார்த்திபனின் உழைப்பு

நடிகரும் இயக்குநருமாக இரவின் நிழல் படத்துக்காக வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி உழைத்திருக்கிறார் பார்த்திபன். உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் என்கிற விளம்பரத்துடன் வெளியாகி உள்ள இந்த படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். கமர்ஷியல் படங்களை தொடர்ந்து கழுவி ஊற்றி வந்த ப்ளூ சட்டை மாறன் விருது முயற்சிக்கான படமான இரவின் நிழல் படத்தையும் தனது விமர்சனத்தில் வச்சு செய்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு

இரவின் நிழல் விமர்சனத்தில் ஆரம்பத்தில் பார்த்திபனின் அளப்பற்ற உழைப்பை பாராட்டி பேசிய ப்ளூ சட்டை மாறன் பின்னர், இவ்வளவு உழைப்பும் வீணாகி விட்டதே என இரவின் நிழல் படத்தை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இந்த வாரம் வெளியான படங்களிலேயே சாய் பல்லவியின் கார்கி ம்ட்டும் தான் அவரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Recommended Video

Iravin Nizhal Public Review |Iravin Nizhal Review | Iravin Nizhal Movie Review |R Parthiban |*Review
இரவின் நிழல் இல்லை

இரவின் நிழல் இல்லை

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது விமர்சனத்திலும், இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார். கடந்த 2013ம் ஆண்டு வெளியான Fish and Cat திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்றும் அந்த படத்தின் நீளம் 134 நிமிடங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய படம்

ஈரானிய படம்

கடந்த 2013ம் ஆண்டு வெனீஸ் திரைப்பட விழாவில் வெளியானது Fish and Cat திரைப்படம். ஈரானில் ஒரு உணவகத்தில் மனித மாமிசங்கள் பரிமாறப்படுவதாக வெளியான உண்மைச் செய்திகளின் அடிப்படையில் இந்த படத்தை Shahram Mokri என்பவர் எழுதி இயக்கி இருந்தார். ஆஸ்கர் விருதுக்கு ஈரான் நாட்டு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த படம் நாமினேஷனில் கூட இடம் பெறவில்லை. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X