»   »  இந்த அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்!

இந்த அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர்!- வீடியோ

மும்பை : பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்ஃபான் கான். 1988-ம் ஆண்டு சலாம் பாம்பே படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர் சமீபத்தில் தன்னை ஏதோ வித்தியாசமான நோய் தாக்கியிருப்பதாகவும் அதுபற்றி நானே விரைவில் சொல்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனக்கு நியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற அரிய வகை நோய் தாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இர்ஃபான் கான்

இர்ஃபான் கான்

பாலிவுட்டின் பிரபல நடிகரான இர்பான் கான், 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', 'லைஃப் ஆஃப் பை' ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். வித்தியாசமான வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் இர்ஃபான்.

வித்தியாசமான நோய்

வித்தியாசமான நோய்

சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் இர்ஃபான் கான், சமீபத்தில், தனக்கு வித்தியாசமான நோய் ஏற்பட்டிருப்பதாகவும், இதுபற்றி விரைவில் நானே சொல்கிறேன் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார்.

சிகிச்சைக்காக

இந்நிலையில் தனக்கு நியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற நோய் தாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் இர்ஃபான். அனைவரின் பிரார்த்தனையும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளேன்.

நிறைய கதைகள் சொல்வேன்

நிறைய கதைகள் சொல்வேன்

நியூரோ என்பதால் இது மூளை சம்பந்தப்பட்ட நோய் அல்ல, இதுபற்றி கூகுள் வழியாக தெரிந்து கொள்ளலாம். திரும்ப வந்து நிறைய கதைகளை சொல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் இர்ஃபான் கான்.

English summary
Bollywood actor Irfan Khan has also acted in Hollywood films. He recently said that he had attacked by some kind of disease. In this situation, he said that he was suffered by rare type of neuroendocrine tumour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X