»   »  கங்கனாவை கடத்தணும், தீபிகாவை டேட் செய்யணும்: இப்படியும் ஆசைப்படும் நடிகர்

கங்கனாவை கடத்தணும், தீபிகாவை டேட் செய்யணும்: இப்படியும் ஆசைப்படும் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை கங்கனா ரனாவத்தை கடத்த வேண்டும், தீபிகா படுகோனேவை டேட் செய்து அவருடன் படத்தில் நடிக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் இர்பான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இர்பான் கான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்கு பெயர் போனவர். ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் இர்பான் என்று பெயர் வாங்கியுள்ளவர்.

Irrfan Khan wants to kidnap Kangana, date Deepika

இந்நிலையில் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். யாரையாவது கடத்த வேண்டும் என்றால் யாரை கடத்துவீர்கள், யாரை டேட் செய்து அவருடன் படத்தில் நடிக்க விரும்புவீர்கள் என இர்பானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

நடிகை கங்கனா ரனாவத்தை கடத்தி எனக்கு பிடித்த மாதிரி படங்களை அவருக்காக தேர்வு செய்வேன். தீபிகா படுகோனேவை டேட் செய்ய விரும்புகிறேன். தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

தீபிகாவும், இர்பானும் சேர்ந்து பிக்கு படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Irrfan Khan said,"I would kidnap Kangana and then select roles and movies of my choices for her, I would like to date Deepika and I would like to work with Deepika and Priyanka."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil