மரண அடி வாங்கிய விக்ரமின் கோப்ரா… இயக்குநரை நம்பி அகல கால் வைக்கும் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்

சென்னை: விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படத்தை லலித் குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

கோப்ராவின் தோல்வியால் தயாரிப்பாளர் லலித் குமார் அஜய் ஞானமுத்து மீது கோபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா

ரசிகர்களை ஏமாற்றிய கோப்ரா

விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 31ம் தேதி வெளியான கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்ததுடன் பலவிதமான கெட்டப்புகளில் வந்து வெரைட்டி காட்டினார். பிரம்மாண்டமான தயாரிப்பு, மிரட்டலான மேக்கிங், விக்ரமின் கடுமையான உழைப்பு, ஏஆர் ரஹ்மானின் இசை என எல்லாம் இருந்தும், திரைக்கதை சொதப்பியதால், படம் படுதோல்வியடைந்தது. இதனால், ரசிகர்களுடன் சேர்ந்து விக்ரமும் ஏமாற்றம் அடைந்தார்.

தயாரிப்பாளர் லலித் குமார் கோபம்?

தயாரிப்பாளர் லலித் குமார் கோபம்?

கோப்ரா வெளியான முதல் நாளில் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கெத்து காட்டியது. ஆனால், படத்தின் ரன்னிங் டைம், நெகட்டிவான விமர்சனங்களால் 2வது நாளில் இருந்தே வசூல் குறையத் தொடங்கியது. இதனால், 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோப்ரா, மொத்தமே 44 கோடிகளை மட்டும் வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில், கோப்ரா தோல்விக்கு காரணமான இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது தயாரிப்பாளர் லலித் குமார் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அஜய் ஞானமுத்துவுக்கு எதிராக புகார்?

அஜய் ஞானமுத்துவுக்கு எதிராக புகார்?

கோப்ரா படத்தை பெரிதும் நம்பியிருந்த விக்ரம் ஏமாற்றத்தை சந்தித்தது போல, தயாரிப்பாளரும் பணத்தை இழந்து விரக்தியில் உள்ளார். இதனால், இயக்குநர் அஜய் ஞானமுத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் லலித் குமார் புகார் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நஷ்டஈடு கேட்கவும் லலித் குமார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அகல கால் வைக்கும் ஆல்ரவுண்டர்

அகல கால் வைக்கும் ஆல்ரவுண்டர்

கோப்ரா படத்தில் விக்ரமுடன் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பாதானும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள இர்ஃபான் பதான், தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கொடுக்க பைனான்ஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து மீதான நம்பிக்கையில் இர்ஃபான் பதான் எடுக்கும் இந்த அதிரடி முடிவு, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கவுள்ள படத்தை, சொந்தமாக தயாரிக்கவுள்ளதாகவும், அதற்கும் இர்ஃபான் பதான் பைனன்ஸ் செய்யலாம் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X