»   »  இரு முகன்... என்ன சொல்கிறார்கள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள்? #IruMugan #Vikram

இரு முகன்... என்ன சொல்கிறார்கள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள்? #IruMugan #Vikram

Posted By:
Subscribe to Oneindia Tamil

இருமுகன் இன்று காலை வெளியாகிவிட்டது. முதல் காட்சி பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படம் தங்களுக்குப் பிடித்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்தப் படம் ஒரு த்ரில்லர் என்றும், இரட்டை வேடங்களில் விக்ரம் கலக்கியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Iru Mugan audience opinion

இடைவேளைக்கு முன் வைத்திருக்கும் ட்விஸ்ட் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவதாக ராம் சினிமாஸ் தெரிவித்துள்ளது.


இருமுகன் முதல் பாதி இப்போதுதான் முடிந்தது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் படம் Awesome. சீட் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. அத்தனை சஸ்பென்ஸ்.. த்ரில்லர்... சந்தேகமே இல்லை... படம் பெரும் வெற்றி என்று கூறியுள்ளார் பிரபல விமர்சகர் ஸ்ரீதேவி.


படம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், நல்ல த்ரில்லர் படம் என்றும், குறிப்பாக நயன்தாரா - விக்ரம் ஜோடி அருமை என்றும் இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.


படத்தில் விக்ரம் ஏற்றுள்ள இரு வேடங்கள் லவ் மற்றும் அகிலன். இதில் லவ் வேடத்தில் விக்ரம் கலக்கியிருக்கிறார் என்று செல்வகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.


இருமுகன் முதல் காட்சி முடிந்து விட்டது. படம் பார்த்த யாரும் இதுவரை எதிர்மறைக் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஸோ... விக்ரம் - ஆனந்த் சங்கர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறியுள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் கமெண்ட்ஸ்.

English summary
Vikram's Iru Mugan first day first show comments from audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil