»   »  "பாக்ஸிங்" மாதவனின் "இறுதிச் சுற்று" டிரெய்லர்.. வெளியிடும் "மான் கராத்தே" சிவகார்த்திகேயன்

"பாக்ஸிங்" மாதவனின் "இறுதிச் சுற்று" டிரெய்லர்.. வெளியிடும் "மான் கராத்தே" சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.

மாதவனின் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவான இறுதிச்சுற்று படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை வருகின்ற ஜனவரி மாதம் 29 ம் தேதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


Irudhi Suttru Trailer Release

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இந்தி டிரெய்லர்(சாலா கதூஸ்) நேற்று வெளியானது.


தொடர்ந்து இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நாளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நாளை மாலை 4.30 மணியளவில் வெளியாகும் படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்."அனைவருக்கும் வணக்கம். இறுதிச்சுற்று படத்தின் டிரெய்லரை நாளை மாலை 4.30 மணியளவில் எனது நண்பர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிடுகிறார்".என்று படத்தின் நாயகன் மாதவன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.


விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இறுதிச்சுற்றை தமிழில் சி.வி.குமார் தயாரித்து இருக்கிறார்.


நீண்ட நாட்கள் கழித்து மாதவன் நடிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்ப்படம் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Tomorrow 4.30 Pm Actor Sivakarthikeyan Release for Madhavan's Irudhi Suttru (Tamil) Trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil