»   »  "உங்க கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு பின்னாடி..." - மிரட்டும் விஷாலின் 'இரும்புத்திரை' டீசர்!

"உங்க கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு பின்னாடி..." - மிரட்டும் விஷாலின் 'இரும்புத்திரை' டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரோபோ ஷங்கரை கழுவி ஊத்திய விஷால்- வீடியோ

சென்னை : விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'இரும்புத்திரை' படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார்.

துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் இரும்புத்திரை. முதல் முறையாக இராணுவ வீரராக நடிக்கும் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சமந்தா இந்தப் படத்தில் மன நல நிபுனராக நடிக்கிறார்.

Irumbuthirai official teaser

இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அர்ஜூனின் வாய்ஸ் ஓவரில் யுவனின் மிரட்டும் இசையோடு வெளியாகி இருக்கிறது 'இரும்புத்திரை' படத்தின் டீசர். இந்தப் படம் சைபர் கிரைம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

English summary
Vishal, Samantha and Arjun starred 'Irumbuthirai' official teaser released. Yuvan shankar raja composed music for this film directed by P.S.Mithran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X