»   »  இருமுகனுக்கு யு ஏ... செப்டம்பர் 9-ம் தேதி ரிலீஸ்!

இருமுகனுக்கு யு ஏ... செப்டம்பர் 9-ம் தேதி ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள பிரமாண்ட படமான இருமுகனுக்கு சென்சாரிஸ் யுஏ சான்று கிடைத்துள்ளது.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விக்ரமுடன், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, சமீபத்தில் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியானது.

சென்சார்

சென்சார்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களும், படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, படம் எப்போது வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

யுஏ

யுஏ

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘இருமுகன்' படத்துக்கு ‘யு-ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புரமோஷன்

புரமோஷன்

இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாகியுள்ளார் விக்ரம். கேரளாவில் இந்தப் படத்துக்காக சென்ற விக்ரமுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.

செப்டம்பர் 9-ல்

செப்டம்பர் 9-ல்

இதைத்தொடர்ந்து இப்படத்தை வரும் செப்டம்பர் 9-ந் தேதியே வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ‘புலி' படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

English summary
Vikram's Irumugan got UA in Censor and will hit screens on September 9th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil