»   »  சிவகார்த்திகேயனின் வெய்ட்டிங் லிஸ்டில் இணைந்த சுதா!

சிவகார்த்திகேயனின் வெய்ட்டிங் லிஸ்டில் இணைந்த சுதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோவாக பத்தாவது படத்தில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகி விட்டார். மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.

வேலைக்காரன் படத்திற்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் ஒரு படமும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்களின் தொடக்கத்துக்காக இரண்டு இயக்குநர்களும் சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். தன்னை வைத்து ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனுக்கும் அடுத்த படம் இயக்க வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தார் சிவா. அவரும் காத்திருக்கிறார். இப்போது இந்த காத்திருப்பு பட்டியலில் இணைந்திருப்பவர் சுதா கொங்கரா.

Iruthisutru director in Sivakarthikeyan's waiting list

இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கையும் முடித்து ரிலீஸ் செய்துவிட்ட சுதா, ஒன் லைன் சொல்லி சிவாவிடம் ஓகேவும் வாங்கி விட்டாராம்.

போகிற போக்கைப் பார்த்தால் சிவா கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் இயக்குநர்கள் எண்ணிக்கை அப்படியே டபுளாகிடும் போல!

English summary
Iruthisutru fame director Sutha Kongara also joined in the waiting directors list for Sivakarthikeyan call sheet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil