அபிநய்க்கு பொறாமை லேசா எட்டிப் பார்க்குதா? புதிய வரவுடன் நெருங்கி பழகும் பாவனி.. என்ன நடக்குது?

சென்னை: டான்ஸ் கற்று கொடுத்த பிறகு அமீர் அப்படியே காணாமல் போய் விடுகிறார் என புதிய ஹோஸ்ட்டான ரம்யா கிருஷ்ணன் வரை சரியாக சொல்லி வரும் நிலையில், அமீர் அடுத்த அபிநய் ஆக மாறி பாவனியுடன் நெருங்கி பழகி வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததோ இல்லையோ அபிநய்க்கு நிச்சயம் கொடுத்திருக்கும் என்றே கமெண்ட்டுகள் குவிகின்றன.

அபிநய் தன்னை லவ் பண்றாரா என ஆரம்பத்தில் பாவனியே கேட்டு பிரச்சனை பண்ணினார்.

சமீபத்தில் ட்ரூத் ஆர் டேர் விளையாட்டில் அதே கேள்வியை ராஜு கேட்டு அபிநயை அசிங்கப்படுத்தினார்.

பாவனியை புரிஞ்சிக்கவே முடியல

பாவனியை புரிஞ்சிக்கவே முடியல

ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சி உடன் பேசி வந்த பாவனி அப்படியே அபிநய் உடன் நெருங்கி பழகி பேச ஆரம்பித்தார். பின்னர், வருணிடம் அபிநய் உன்னை பற்றி தப்பா சொல்கிறான் என பெரிய சண்டையே போட்டு அபிநயை அசிங்கப்படுத்திய நிலையில் அபிஷேக் உடன் நட்பாக பழகினார். இப்போ அடுத்ததாக புதிய வரவுடன் பாவனிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

நடுவே வந்த அமீர்

நடுவே வந்த அமீர்

50 நாட்கள் கடந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அமீர் பாவனி மற்றும் அபிநய் இருவருக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு பாவனியுடன் அடித்து விளையாடும் காட்சிகள் வெள்ளிக்கிழமை நடந்ததாக காட்டப்பட்டு ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது.

கடைசியில் அபிநய்

கடைசியில் அபிநய்

ஓட்டுப் போட்டு கடைசியாக ஒவ்வொரு வாரமும் சேவ் ஆகி வரும் அபிநய் பாவனி மற்றும் அமீருக்கு கடைசியாக அமர்ந்து கொண்டு ஒரே ஏக்கமாக அவர்கள் பழகி வருவதை பார்த்து கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன அபிநய் நிலைமை இப்படி ஆகிடுச்சே என ஃபீல் செய்து வருகின்றனர்.

அபிநய்க்கு பொறாமை

அபிநய்க்கு பொறாமை

புதிதாக வந்த நடன ஆசிரியர் அமீர் உடன் பாவனி நெருங்கி நட்பாக பழக ஆரம்பித்ததை அபிநய் பார்ப்பதை தனியாக பல முறை பிக் பாஸ் எடிட்டர் ஜூம் போட்டு காட்டி அவரது பொறாமையை வெளிக்காட்டுகிறார் என்றே நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். கடைசியாக அங்கிருந்து எழுந்து போக கிளம்பிய நிலையில், இப்படி அடித்து விளையாட என்னால் முடியவில்லை என அபிநய் சொன்னதை பார்த்து மனுசனுக்கு பொறாமை அதிகம் ஆகிடுச்சு டோய் என்றும் இதுவரை நட்பாக பழகிய அபிநய் இடம் இப்படி அடித்து விளையாடாத பாவனி புதிதாக வந்த அமீர் உடன் இப்படி விளையாடுவது ஏன் என்றும் நெட்டிசன்கள் விவகார கேள்விகளை ராஜு பாய் போல எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X