»   »  வாட்ஸ்ஆப் பரபர... தற்கொலை செய்து கொண்டாரா நடிகர் பப்லு?

வாட்ஸ்ஆப் பரபர... தற்கொலை செய்து கொண்டாரா நடிகர் பப்லு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு தற்கொலை செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் பரவிய வதந்தியால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உள்பட பல படங்களில் நடித்தவர் பப்லு எனும் பிருத்விராஜ். தற்போது ‘வாணி ராணி' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Is actor Babloo alive?

நேற்றும் இன்றும் வாட்ஸ்ஆப்பில் அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.

அதில், "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்," என்று பேசியிருந்தார்.

இது பரபரப்பைக் கிளப்பியது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாணி ராணியைத் தயாரிக்கும் ராடான் நிறுவனமும் அவரைப் பற்றி தகவல் ஏதும் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.

போலீஸ் தரப்பிலும் இந்த ஆடியோ உண்மைதானா? என்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஆடியோவில் இடம்பெற்றது ஒரு குறும் படத்தில் அவர் பேசிய வசனம் என்று இப்போது தகவல் கிடைத்துள்ளது. பப்லு நலமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

English summary
Is actor Prithviraj alias Babloo alive? This question is raising from various people due to 'suicide' speech audio spreading in whatsapp. Sources say that the actor is alive now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil