என்னது...ஷங்கர் மகளுக்கு திருமணமா...அப்போ கொரோனா குமார் நிலைமை?
சென்னை : டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கருக்கு திடீரென திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொரோனா குமாரின் நிலைமை என்ன ஆகும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியவர் ஷங்கர். கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான இவர், டாப் ஹீரோக்களை வைத்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டைரக்டர் ஷங்கர் மகள் திருமணம்
டைரக்டர் ஷங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு 2021 ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரும் தொழிலதிபருமான ரோஹித் தாமோதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதிதி ஷங்கருக்கு திடீர் திருமணமா
இளைய மகள் அதிதி, டாக்டர் படித்திருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா ஹீரோயின் ஆகி உள்ளார். சூர்யா தயாரிப்பில், டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கிராமத்து படமான விருமன் படத்தின் மூலம் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்ததாக வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேசன் தயாரிப்பில், டைரக்டர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

அப்போ கொரோனா குமார் நிலைமை
இந்த சமயத்தில் அதிதிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடு நடந்து வருவதாகவும், டைரக்டர் ஷங்கர் திரை பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து வருவதாகவும் கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனால் பலரும் ஏன் இந்த திடீர் திருமண ஏற்பாடு, என்ன பிரச்சனை, அதிதி நடிப்பதாக ஒப்புக் கொண்ட கொரோனா குமார் படத்தின் நிலை இனி என்ன ஆகும் என விசாரிக்க துவங்கி விட்டனர்.

ஓ...இது தான் மேட்டரா
ஆனால் விசாரித்ததில் அதிதிக்கு திருமணம் என்ன சொல்லப்படுவது தவறான தகவலாம். ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்து வருவது உண்மை தான். ஆனால் அது அதிதியின் திருமண அழைப்பிதழ் இல்லையாம், ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் தானாம். கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில், கோவையில் திருமணம் நடைபெற்றதால் திரை பிரபலங்கள் யாரையும் அழைக்க முடியாததால் மே 1 ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதோடு கொரோனா காலம் என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியும் தள்ளி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











